திங்கள், 1 பிப்ரவரி, 2016

புதுச்சேரியில் பிரியங்கா காந்தி மகளின் கூடைப்பந்து விளையாட்டை பார்க்க வந்தார்

புதுச்சேரி: மகளின் கூடைப்பந்து விளையாட்டை பார்க்க புதுவைக்கு
வந்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி மகளின் கூடைப் பந்து விளையாட்டை பார்க்க பிரியங்கா காந்தி இன்று புதுவை வந்துள்ளார். அகில இந்திய இளையோர் கூடைப்பந்து போட்டி நாளை புதுவையில் தொடங்குகிறது. வரும் 8-ம் தேதி வரை நடைபெறும் போட்டியில் 25 மாநில அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் டெல்லி அணி சார்பில் பிரியங்கா காந்தி மகள் மரியா பங்கேற்று விளையாட உள்ளார்
. Priyanka Gandhi visited pondicherry முன்னதாக பிரியங்கா காந்தியின் வருகை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வந்த பிரியங்கா மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து காரில் புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார். மேலும் அவரது வருகையையொட்டி பேனர், கட் அவுட்கள், தோரணங்கள் என எதுவும் வைக்க கூடாது எனவும் அப்படி யாராவது வைத்தால் அவர்கள் மீது அகில இந்திய கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பிரியங்காவின் வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது
://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: