ஞாயிறு, 31 ஜனவரி, 2016

அடுத்தடுத்து பத்ம விருதுகள்.. அப்படி என்னதான் சாதித்தார் ரஜினி? அருள்மொழி சாட்டை....

சென்னை: பத்ம விருதுகளை அடுத்தடுத்து கொடுக்கும் அளவுக்கு அப்படி என்னதான் நடிகர் ரஜினிகாந்த் சாதித்துவிட்டார் என்று திராவிடர் கழக பிரசார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு பத்மவிபூஷண் விருது கொடுத்துள்ளது மத்திய அரசு. ஆனால் ரஜினிகாந்துக்கு அரசியல் ஆதாயத்துக்குதான் மத்திய பாஜக அரசு இந்த விருதை கொடுத்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட பேசு விவாத நிகழ்ச்சியில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி கூறியதாவது: ரஜினிகாந்துக்கு இந்த விருது கொடுத்திருப்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்று கூறப்பட்டது. இது சரியான கருத்து அல்ல. கண்டிப்பாக இதில் மாற்றுக் கருத்து உள்ளது. நிறைய பேரிடமும் இருக்கும்.
DK's Arulmozhi questions Padma award to Rajnikanth யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்ற பொதுவிதிக்கு உட்பட்டு நான் சொல்லவில்லை. அதற்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட முறையில் தெளிவாகவே சொல்கிறேன்.... இந்த மாதிரியாக அடுத்தடுத்து விருதுகளை வழங்கிக் கொண்டே போகிற அளவுக்கு அவர் (ரஜினிகாந்த்) மக்களுக்கு என்ன செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. 
ரஜினிகாந்தின் நடிப்பாற்றல் பற்றி எனக்கு எந்த குறைவான மதிப்பீடும் இல்லை. அவருக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்... நம் வீடுகளில் இருக்கும் குழந்தைகளும் அவரை ரசித்தவர்கள்தான்...நாமும் ரசித்தவர்கள்தான். 
இதற்கான அங்கீகாரமாக பத்மஸ்ரீ விருது கொடுத்தீங்க... அதன் பின்னர் ரஜினிக்கு பத்ம பூஷண் விருது கொடுக்கப்பட்டது. இந்த பத்ம ஸ்ரீ விருதுக்கும் பத்மபூஷண் விருதுக்கும் இடைப்பட்ட காலத்தில் ரஜினி அப்படி என்னதான் சாதித்தார் எனத் தெரியவில்லை. பத்மபூஷணுக்கும் தற்போதைய பத்மவிபூஷண் விருதுக்கும் இடைப்பட்ட காலத்தில் திரைத்துறையை மேம்படுத்தவும் தன் நடிப்பாற்றலிலும் அவர் அப்படி என்ன செய்திருக்கார் என்பதும் தெரியவில்லை. 
இன்றும் அவர் (ரஜினிகாந்த்) அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்புகிற லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் (பாஜக) வேண்டியவர்களாக வேண்டும் என்கிற அரசியல் வியூகத்தை தவிர ரஜினியின் தொண்டு அல்லது திறமையை அளவிட்டுக் கொடுத்ததாக பார்க்கவில்லை. 
அவருக்கு முன்பு கொடுக்கப்பட்ட விருதுக்கும் தற்போது விருது கொடுக்கப்பட்ட காலத்துக்கும் இடையே ஒரு நடிகராக அல்லது அவரது பல்வேறு தொடர்புடைய சாதனை என்ன என்ற கேள்விக்கு விருது கொடுத்தவர்கள் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர் அருள்மொழி கேள்வி எழுப்பினா

//tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: