ஜெய்பூர்: கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும்
பாலின பரிசோதனை மீதான தடை நீக்கப்படக்கூடும் என்று மத்திய அமைச்சர் மேனகா
காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் மத்திய பெண்கள்
மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கலந்து கொண்டு
கொண்டார்.
Ban may go, sex test on foetus could be mandatory: Maneka Gandhi
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் பாலின பரிசோதனை
மீதான தடையை நீக்குவது குறித்து மத்திய அமைச்சரவை ஆலோசித்து வருகிறது.
மேலும் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிவது கட்டாயம்
ஆக்கப்படும்.
அப்படி குழந்தை ஆணா, பெண்ணா என்பது கண்டறிந்து பதிவு செய்யப்படும். கருவை
கலைத்தால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் அல்லது மருத்துவ சான்றிதழ்
அளிக்க வேண்டும்.
இந்த புதிய முறை மூலம் கருவிலேயே பெண் குழந்தைகள் அழிக்கப்படுவதை தடுக்க முடியும். பாலினத்தை கண்டறிந்தவுடன் அது குறித்து பதிவு செய்யப்படுவதால் வீட்டில் பிரசவம் பார்க்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். வீட்டில் பிரசவம் பார்க்கையில் பெண் குழந்தையை கொலை செய்ய வாய்ப்பு உள்ளது. தடையை மீறி அதிகாரம் படைத்த சிலர் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதை கலைத்து வருகிறார்கள். ஏற்கனவே நிரம்பி வழியும் சிறைகளில் மேலும் பலரை அடைக்க விரும்பவில்லை என்றார்.
//tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக