விஜய் பிரபாகரன் ஐ.பி.எல்., பேட்மின்டன் போட்டிக்காக சென்னை அணியை ஏலம்
எடுத்தார். கேப்டன் 'டிவி' நிர்வாக இயக்குனராக இருந்து தொழிலை கவனித்து
வருகிறார். இவரது தம்பி சண்முக பாண்டியன் சினிமா கதாநாயகனாகி விட்டதால்
விஜய் பிரபாகரனை அரசியலுக்கு கொண்டு வர விரும்புகிறார் விஜயகாந்த். அதற்கு
இந்த சட்டசபை தேர்தல் நேரம் சரியான நேரமாம் .ஜோதிடர்கள் யோசனை.
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அடுக்கடுக்கான நிபந்தனைகளை விதிப்பதால் தி.மு.க.,வினர் கடுப்பாகி உள்ளனர். அவருக்கு சில நாட்களுக்கு 'தண்ணி' காட்டும்படி கட்சியினருக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த். இதனால் தொடர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிடும் முடிவுக்கு வந்த அவர் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்தார். தோற்றாலும் அவரது கட்சி கணிசமான ஓட்டுக்களை பெற்றது. எனவே சட்டசபை தேர்தலிலும் கூட்டணி அமைக்க விஜயகாந்த் விரும்புவதை அறிந்ததும் அவரது கட்சியினர் தி.மு.க.,வுடன் கூட்டணி சேர வேண்டும் என வலியுறுத்த துவங்கினர். தி.மு.க.,வும் அதை விரும்புவதால் இரு தரப்புக்கும் இடையே ரகசிய பேச்சு துவங்கியது. ஆனால் கூட்டணிக்காக விஜயகாந்த் வித விதமான நிபந்தனைகளை விதிப்பதால் தி.மு.க.,வினர் கடுப்பு அடைந்துள்ளனர். இதனால் அவருக்கு சில நாட்களுக்கு 'தண்ணி' காட்டும்படி கூட்டணி பேச்சு நடத்தும் தன் கட்சி நிர்வாகிகளிடம் கருணாநிதி கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து தி.மு.க., வட்டாரம் கூறியதாவது: தே.மு.தி.க., தரப்பில் சரி பாதி தொகுதிகளை விட்டுக் கொடுப்பதோடு ஆட்சி அமைக்கும் பட்சத்தில் இரண்டரை ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்றனர். தற்போது தன் மூத்த மகன் விஜய் பிரபாகரனை அரசியல் வாரிசாக களமிறக்க விரும்பும் விஜயகாந்த் 'தி.மு.க., கூட்டணியில், முதல்வர் வேட்பாளராக கருணாநிதி இருக்கும் பட்சத்தில் துணை முதல்வர் வேட்பாளராக விஜய் பிரபாகரனை அறிவிக்க வேண்டும்' என்கிறார்.அத்துடன் 'அமைச்சரவையில் 30 அமைச்சர்கள் இடம் பெற்றால் அதில் ஆறு அமைச்சர் பதவியை தங்களுக்கு தர வேண்டும்' என்றும் கேட்கிறார். இதை கூட்டணி பேச்சில் ஈடுபட்டுள்ள குழுவினர், கருணாநிதியிடம் கூற அவர் கடும் கடுப்பு அடைந்துள்ளார். 'விஜயகாந்தை கொஞ்ச நாட்களுக்கு அப்படியே விடுங்கள். தேர்தல் நெருக்கத்தில் அவரை பார்த்துக் கொள்ளலாம்' எனக்கூறி விட்டார்.இவ்வாறு தி.மு.க., வட்டாரம் தெரிவித்தது.
விஜய் பிரபாகரன் ஐ.பி.எல்., பேட்மின்டன் போட்டிக்காக சென்னை அணியை ஏலம் எடுத்தார். கேப்டன் 'டிவி' நிர்வாக இயக்குனராக இருந்து தொழிலை கவனித்து வருகிறார். இவரது தம்பி சண்முக பாண்டியன் சினிமா கதாநாயகனாகி விட்டதால் விஜய் பிரபாகரனை அரசியலுக்கு கொண்டு வர விரும்புகிறார் விஜயகாந்த். அதற்கு இந்த சட்டசபை தேர்தல் நேரம் சரியான நேரம் என கணக்கிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் விஜயகாந்த் - பிரேமலதா திருமண நாளை கட்சியினரும்; விஜயகாந்த் குடும்பத்தினரும் மிக சிறப்பாக கொண்டாடினர். அந்த நாளில் விஜயகாந்துக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை விஜய் பிரபாகரன் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.
- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.com

ரூ.30 லட்சம் கார் பரிசு!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக