சனி, 6 பிப்ரவரி, 2016

மணமக்களுக்கு கூட மரியாதை இல்லையா.. அம்மா ஸ்டிக்கர் பற்றி குஷ்பு கொதிப்பு



சென்னை: அதிமுகவினர் நடத்திய இலவச திருமணத்தின்போது மணமக்கள் நெற்றியில் அக்கட்சி பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா படத்தை ஒட்டிய தொண்டர்கள் செயலை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கண்டித்துள்ளார். உடுமலைப்பேட்டையில் அதிமுகவினர் நேற்று 68 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர். அப்போது மணமக்கள் நெற்றியில் ஜெயலலிதா போட்டோவை ஒட்டி வைத்திருந்தனர். இலவச திருமணம் செய்ய வந்த ஏழை மணமக்களை இவ்வாறு, தனிநபர் போட்டோவை போட்டு அசிங்கப்படுத்திவிட்டதாக சமூக வலைத்தளங்களில் அதிமுக நிர்வாகிகளுக்கு எதிராக கண்டன குரல்கள் எழும்பியுள்ளன. குஷ்பு தனது டிவிட் ஒன்றில், "என்ன இது? மாலையிலும், தலை கிரீடத்திலும் முதல்வர் போட்டோவா? மணமக்களுக்கான மரியாதை கூட காப்பாற்ற முடியாதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். "ஜெயலலிதா ஆட்சியில், அடிமைகள், அடிமைகளாகவே இருக்கிறார்கள். புது மணத்தம்பதிகள் உட்பட யாருக்கும் சுயமரியாதை கிடையாது. கடவுள்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும்" என்று குஷ்புவின் டிவிட்டர் பாலோவர் கூறியதையும், குஷ்பு ரீடிவிட் செய்து அக்கருத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
//tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: