ஞாயிறு, 31 ஜனவரி, 2016

பதன்கோட் தாக்குதலால் உறவு போச்சு: பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலை

இஸ்லாமாபாத்: ''பதன்கோட் தாக்குதலால், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான, வெளியுறவு துறை செயலர்களின் பேச்சு தடைபட்டுள்ளது,'' என, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.இந்தியா - பாக்., இடையிலான பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், அதை பாதிக்கும் விதமாக, பதன்கோட் தாக்குதல் அமைந்து விட்டது' என, நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளதாக, பாக்., ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படை தளத்தில், பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், இந்திய வீரர்கள், ஏழு பேர் வீர மரணம் அடைந்தனர்; நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.'இந்த தாக்குதலுக்கு காரணமாக, ஜெய்ஸ் - இ - முகமது தலைவன் மசூத் அன்சார் உள்ளிட்ட பயங்கரவாதிகளை கைது செய்தால்தான், பேச்சு தொடரும்' என, இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.


இந்நிலையில், அமெரிக்காவின் நெருக்கடியால், மசூத் அன்சார் உள்ளிட்ட பயங்கரவாதிகளை பிடித்து விசாரித்த பாகிஸ்தான், இந்தியா வழங்கிய ஆதாரங்கள், குற்றத்தை நிரூபிக்க போதுமானவையாக இல்லை எனக்கூறி, கைது நடவடிக்கையை தவிர்த்து வருகிறது.  maalaimalar.com

கருத்துகள் இல்லை: