நடிகையாகப் பிரவேசித்து திரையுலகைக் கலக்கியவர். கமல் நீங்கலாக ஏறக்குறைய அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் ஜோடி சேர்ந்தவர். பரபரப்பான நடிகையாக இருக்கும்போதே சட்டென்று ரூட் மாறி அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கியவர். பெயருக்காக இல்லாமல் தீவிர அரசியல்வாதியாக மிளிரும் நடிகை ரோஜாவுடன் சில மணித்துளிகள் பேசியதில்..."மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் அரசியலுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை குறைவுதான்:
நடிகை ரோஜா நடிகையாகப் பிரவேசித்து திரையுலகைக் கலக்கியவர். கமல் நீங்கலாக ஏறக்குறைய அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் ஜோடி சேர்ந்தவர். பரபரப்பான நடிகையாக இருக்கும்போதே சட்டென்று ரூட் மாறி அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கியவர். பெயருக்காக இல்லாமல் தீவிர அரசியல்வாதியாக மிளிரும் நடிகை ரோஜாவுடன் சில மணித்துளிகள் பேசியதில்..."
சினிமா, அரசியல் - இரண்டுமே ஆணாதிக்கம் நிறைந்த துறைகள். இந்த இரண்டு துறைகள் குறித்த உங்களது பார்வை? சினிமாவில் ஜாலியாக ஆடிப் பாடி நடித்தால் போதும், மக்கள் மனங்களில் இடம்பிடித்துவிடலாம். ஆனால் மக்கள் நலனுக்காகவே இயங்கினாலும், மக்கள் மத்தியிலும் சரி, கட்சியிலும் சரி பாராட்டுப் பெறுவது மிகக் கடினம். எவ்வளவு உழைத்தாலும் பெண்கள் அரசியலில் திருப்தியை உணர்வது அபூர்வம்.
பெண்களின் அரசியல் பிரவேசத்துக்கு ஆணாதிக்கம் தடையாக இருக்கிறதா?அதிலென்ன சந்தேகம்? தங்கள் கணவனின் அல்லது தனது தந்தையின் மறைவையடுத்து அரசியல் நோக்கித் திரும்பிய பெண்கள்தான் பெருமளவில் அரசியலில் இருக்கிறார்கள். இவர்கள் தங்களது குடும்ப கௌரவத்தை அத்திவாரமாக வைத்துக்கொண்டு அரசியலில் தொடர்கிறார்கள். ஆனால் மக்கள் நலனை நோக்காகக் கொண்டு, மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் அரசியலுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. ஒருவேளை அப்படியான பெண்கள் அரசியலுக்கு வந்தாலும், ஆணாதிக்கம் நிறைந்த இந்த அரசியல் அவர்களை ஒதுக்குவதிலேயே குறியாக இருக்கிறது. இந்த நிலை மாறவேண்டும் என்றால், பெண்கள் அதிகளவில் அரசியலின்பால் திரும்ப வேண்டும்.
உங்களது அரசியல் பிரவேசத்தை ஏனைய அரசியல்வாதிகள் எவ்வாறு பார்க்கிறார்கள்? நிச்சயமாக என் மேல் அவர்களுக்கு ஒரு கோபம் இருக்கும். நான் அரசியலுக்குள் வந்து 15 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை பெண்களுக்கு ஆதரவான பல பிரச்சினைகளில் போராட்டம், ஊர்வலம் என்று களமிறங்கியிருக்கிறேன். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒரு நடிகையாக இருப்பதால், நான் கூறும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் போய்ச் சேருகின்றன. ஊடகங்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. இது, பல அரசியல்வாதிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தவே செய்யும். எப்படியாவது என்னை அரசியலை விட்டுத் துரத்திவிடவேண்டும் என்பதற்காக சொந்தக் கட்சிக்குள்ளேயே எனக்கெதிராக அரசியல் செய்து இரண்டு முறை என்னைத் தோற்கடித்திருக்கிறார்கள்.
அந்தத் தோல்வி உங்களுக்கு எவ்வாறான உணர்வைத் தந்தது? வெற்றிபெறவேண்டும் என்ற உத்வேகத்தைத்தான் நான் சந்தித்த தோல்விகள் எனக்குத் தந்தன. தொடர்ந்து முயற்சித்தேன். எம்எல்ஏ ஆகிவிட்டேன். சந்தோஷமாக உணர்கிறேன்.>மாநில அரசியலுடன் நின்றுவிட்டீர்களே? தேசிய அரசியல் பிரவேசம் எப்போது? ‘வீட்டுக்குள் வெற்றி பெற்றால்தான் வெளியில் வெற்றிபெறும்போது மரியாதை இருக்கும்’ என்று தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு. ஒரு தலைவியாக நான் எனது கட்சியில் பெயர்பெற்றுவிட்டேன். காலம்வரும்போது தேசிய அரசியலைப் பார்த்துக்கொள்ளலாம்."
ஆந்திராவின் மகளாக இருந்தாலும், தமிழகத்தின் மருமகள் நீங்கள். தமிழக அரசியலில் உங்களை எதிர்பார்க்கலாமா? தமிழக அரசியலிலும் வாய்ப்பு வந்தது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே தெலுங்கு அரசியலில் இருப்பதால் அதிலேயே தொடருமாறு என் கணவர்தான் தடுத்துவிட்டார்.
எனது தொகுதி திருத்தணி எல்லையில் இருக்கும் நகரி. அதில் 50 சதவீதம் தெலுங்கர்கள். 50 சதவீதம் தமிழர்கள். எனவே, மகளாகவும் மருமகளாகவும் வெற்றிபெற்ற திருப்தி எனக்கு இருக்கிறது.புதியதலைமுறை.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக