வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

கெய்ல்' குழாய் திட்ட அனுமதி சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

சென்னை: 'கெய்ல் நிறுவனத்தின், இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை தடை செய்ய முடியாது' என, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பிற்கு எதிராக, சீராய்வு மனு தாக்கல் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கேரளா மாநிலம்,கொச்சியில் இருந்து, கோவை, திருப்பூர்,ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் வழியாக, பெங்களூருக்கு, பிரமாண்ட குழாய்கள் மூலம், இயற்கை எரி வாயுவை கொண்டு செல்லும் திட்டத்தை, 2012ல், 'கெய்ல்' நிறுவனம் துவக்கியது.   முதல்ல 'கெய்ல்க்கு அனுமதி கொடுத்தது தாயுள்ளம் கொண்ட தங்க தாரகை தான் அதனால் தான் மறு சீராய்வு இல்லை என்றால் இந்நேரம் கலிங்கர் கொண்டு வந்த திட்டம் என்று 3 பக்க எந்த கூன் பாண்டி மந்திரி பேரில் வந்து இருக்குமே...

* குழாய் அமைக்கப்படும் விவசாய நிலத்தில், குழாயில் இருந்து இருபுறமும், தலா, 6 மீ., வரை, விவசாயப் பணிகள் செய்யக் கூடாது<* குழாயில் பாதிப்பு, உடைப்பு ஏற்பட்டால், விவசாயியே பொறுப்பு என்பது உட்பட, பல கெடுபிடி உத்தரவுகள்< பிறப்பிக்கப்பட்டன. இத்திட்டத்தை, விவசாய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்த்தன. தமிழக அரசும், அனுமதி வழங்க மறுத்தது. 
இதை எதிர்த்து, 'கெய்ல்' நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இதை விசாரித்த நீதிபதிகள், திட்டத்திற்கு அனுமதி அளித்ததோடு, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இது, தமிழக விவசாயிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து, விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதுகுறித்து விவாதிக்க, தலைமை செயலகத்தில், நேற்று காலை, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர்கள் மற்றும் <>உயரதிகாரிகள் பங்கேற்றனர்
அப்போது, 'கெய்ல்' நிறுவனம், ஏழு மாவட்டங்களில், விவசாய நிலங்களின் வழியாக, எரிவாயு குழாய்கள் பதிக்க அனுமதி வழங்கி, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
சீராய்வு மனுவில் எடுத்துரைக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து, முதல்வர் அறிவுரை வழங்கினார்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: