கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை போலீஸார்
பலாத்கார வழக்கில் கைது செய்துள்ளனர்.
இந்த சிறுவன் ஏற்னவே தனது 14 வயதில் 24 வயதுப் பெண்ணைப் பலாத்காரம் செய்து
பரபரப்பை ஏற்படுத்திக் கைதாகி சிறுவர் சிறைக்குச் சென்று தண்டனை
அனுபவித்தவன்.
Teenager commits second rape in 3 years
3 ஆண்டு தண்டனை (சிறார்களுக்கு அதிகபட்ச தண்டனையே அவ்வளவுதான் - கொலையே
செய்தாலும் கூட) முடிந்து திரும்பி வந்த அவன் தற்போது 8 வயது சிறுமியை
பலாத்காரம் செய்து மீண்டும் சிக்கியுள்ளான். இந்த சம்பவம் சூளகிரியை அதிர
வைத்துள்ளது.
திங்கள்கிழமை மாலை இந்த பலாத்கார சம்பவம் நடந்துள்ளது. இந்த
அக்கிரமத்துக்கு ஆளான சிறுமி, குண்டு குருக்கி என்ற கிராமத்தைச் சேர்ந்த
கூலித் தொழிலாளியின் மகள் ஆவார். பாலியல் குற்றத்திற்கு உரிய தண்டனை வயது எல்லையை 14 ஆக குறைக்கவேண்டும்
அந்த சிறுமி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை நைச்சியமாக பேசி தனியான இடத்திற்குக் கூட்டிச் சென்று சீரழித்து விட்டான் இந்த சிறுவன். அப்போது அந்த சிறுமி கத்தியபோது கத்தினால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். இருப்பினும் அச்சிறுமி அதையும் மீறி கத்தியுள்ளார். சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த, சிறுவன் தப்பிஓடி விட்டான். நடந்ததை அறிந்து அதிர்ந்து போன பெற்றோர் சூளகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து இன்று அவனைக் கைது செய்தனர். ஓசூரில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் பின்னர் சிறுவனை சேலம் சிறார் காப்பகத்தில் கொண்டு போய் அடைத்தனர். ://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக