வியாழன், 4 பிப்ரவரி, 2016

அதிமுகவுக்கு சார்பாக தேர்தல் கமிஷன்! கடந்த இரு தேர்தல்களை போலவே விலை போய்விட்ட......

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்த மக்கள் தொகையான 7.77 கோடி பேரில் 5.79 கோடி பேர் வாக்காளர்கள். கிட்டத்தட்ட 75.56 சதவீதம் பேர் தமிழகத்தில் வாக்காளர்களாக பதிவு செய்திருக்கிறார்கள் என்கிறது தேர்தல் ஆணையம். ஆனால், இதில் 40 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் என குற்றச்சாட்டை கிளப்புகிறார் தி.மு.க.தலைவர் கலைஞர். இவரது குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக பா.ஜ.க. இல.கணேசன் உட்பட எதிர்க்கட்சியினரும் சூட்டை ஏற்படுத்தி யிருக்கின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து நாம் ஆராய்ந்தபோது நமக்கு கிடைத்த சில புள்ளிவிபர ஆதாரங்கள், போலி வாக்காளர் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதாக இருக்கின்றன.
;வாக்காளர்களின் பெயர்கள் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டி ருக்கும் அதிகாரிகள் சிலரை சந்தித்து நாம் பேசியபோது, ""தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அரசு தரப்பில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆளும் கட்சியின் மா.செ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கொண்டு வந்து தரும் வாக்காளர் சேர்க்கை விண்ணப்பங் களை அப்படியே ஏற்றுக்கொண்டு அதனை வாக்காளர் பட்டியலில் இணைக்கவேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.

இப்படி இணைக்கப்பட்டவர்களில் பெரும் பாலும் 11, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவியர்கள்... அதாவது, விலையில்லா   மிதிவண்டி (சைக்கிள்) வழங்கும் திட்டத்தின்படி கடந்த  2014-15 நிதியாண்டில் 11-ஆம் வகுப்பு மாணவ- மாணவியர்கள் 6 லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு மிதிவண்டி வழங்கப்பட்டது. அதே& போல, 2015-16 நிதியாண்டில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவியர்கள் 6 லட்சத்து 15 ஆயிரத்து 518 பேருக்கு ஜெயலலிதா சைக்கிள் வழங்கினார்.இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி 233 கோடியே 17 லட்சம்.  இந்த மாணவ-மாணவியர்கள்தான் ஆட்சியாளர்களின் டார்கெட்! இவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டி ருக்கின்றன. அதாவது 18 வயது நிரம்பியவர்கள் மட்டும்தான் வாக்களிக்க முடியும். 11-ஆம் வகுப்பு படிப்பவர்களின் வயது 16தான். ஆனால், இவர் களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். அரசுப் பணம் 460 கோடிக்கு மேல் செலவு செய்து, விலையில்லா மிதிவண்டித் திட்டத்தைப் பயன் படுத்தி சேர்த்துள்ளனர். இது ஒரு யுக்தி. இதைத் தாண்டி ஒரே நபரை வேறுவேறு பெயர், முகவரி யில் வாக்காளர்களாகச் சேர்ப்பது, எதிர்க்கட்சி ஆதரவு வாக்காளர்களை நீக்குவது உட்பட வெவ்வேறு யுக்திகளையும் கையாண்டுள்ளது ஆளுந்தரப்பு'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.>மேலும் இதுகுறித்து நாம் விசாரித்தபோது, ""2001-2006 ஜெ. ஆட்சிக் காலத்திலும் போலிவாக்காளர்களை தமிழகம் முழுவதும் சேர்த்தனர். இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட அதிகாரி ஒருவர் தி.மு.க. ஆதரவாளர்.  அவரது முயற்சியில், விழுப்புரம் மாவட்டத்தில் ... nakkheeran,in

கருத்துகள் இல்லை: