சனி, 6 பிப்ரவரி, 2016

10 நாட்களில் கூட்டணி அறிவிப்பு பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

நாகர்கோவில் :''பத்து நாட்களில் பா.ஜ., கூட்டணி பற்றிய அறிவிப்பை தேசிய தலைமை வெளியிடும்,'' என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:பிரதமர் மோடி வருகையால் தமிழக பா.ஜ.,வில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களையும், நாட்டின் வளர்ச்சியையும் பிரதமர் தெளிவாக எடுத்து கூறியுள்ளார். அவரது பேச்சால் விவசாயிகள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை பயணம் செல்ல உள்ளார். இந்த பயணம் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க உதவியாக இருக்கும். இந்த விஷயத்தில் மத்திய அரசின் முயற்சிகளுக்கு மீனவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
ஈரான் நாட்டில் சிறை பிடிக்கப்பட்டுள்ள 49 இந்திய மீனவர்களை மீட்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.குளச்சல் துறைமுக விஷயத்தில் மக்களையும், மீனவர்களையும் திசை திருப்ப முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் மீனவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது. மீனவர்களுக்கு அதிக பயன்கள் கிடைக்கும். சட்டமன்ற தேர்தல் பணிகளை பா.ஜ., தொடங்கி விட்டது. தி.மு.க. கூட்டணி பற்றி சுப்பிரமணியசுவாமி கூறியுள்ள கருத்துஅவரது சொந்த கருத்து. தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேசிய தலைமை பத்து நாட்களுக்குள் அறிவிக்கும். தமிழகத்தில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அதை இனி யாரும் தனிமைப்படுத்த வேண்டியதில்லை என்றார். தினமலர்.com

கருத்துகள் இல்லை: