முழுத்தமிழ் நாட்டிலேயே ரங்கநாதன் தெரு போல ஒரு அங்காடி தெரு இல்லை என்றே கூறலாம் ம்ம்ம் சரியான நெரிசல் ஜவுளி மற்றும் வீட்டு பொருட்கள் என்றாலே எல்லோருக்கும் வரும் ஞாபகம் தி நகர் தான். ஏன் என்றால் எல்லாம் ஓர் இடத்தில் அணைத்து பொருள்களும் கிடைக்கும் என்பதால் தான். இங்கு உள்ளூர் மட்டும் இன்றி வெளியூரிலும் இருந்து இங்கு வருகிறார்கள். ஆகையால் இந்த இடம் நெரிசல் மிகுந்த இடமாக உள்ளது.
அப்படிப்பட்ட இடத்தை பாதுகாப்போடு வைத்திருப்பது நம் அரசின் கடமை. ஏன் என்றால் நம் நாட்டில் தீவிரவாதி அச்சுறுத்தல் இருப்பதாலும், தீ விபத்து போன்ற அசம்பாவிதம் ஆதேனும் நேரிட்டாலும் இருக்கும் இடத்தை விட்டு மக்கள் வெளியேற வேண்டும். ஆனால் தி நகரில் குறிப்பாக ரங்கநாதன் தெருவில் வெளியேற முடியாத, நெரிசல் மிகுந்த இடமாக உள்ளது. விபத்தில் மாட்டி உயிர் இழப்பு, காயம் ஏற்படுவதை விட நெரிசலில் மாட்டி உயிர் இழப்பு, காயம் ஏற்படுவது தான் அதிகம் .
இதை பல விபத்து நடந்த இடத்தில் கண்டு இருப்போம்.. எனவே தி நகர் ரங்கநாதன் தெருவில் மக்கள் நெரிசல் இல்லாமல் செல்லவும் விபத்து நேரத்தில் மக்கள் வெளியேறும் வகையில் தெருவை அகலபடுத்தி, மாற்று பாதை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விபத்து நடந்த பிறகு நநடவடிக்கை எடுப்பதை விட வரும் முன் காப்பதே நல்லது. ரங்கநாதன் தெருவுக்கு ஆபத்து காத்திருக்கிறது Posted by
m devakumar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக