வியாழன், 20 அக்டோபர், 2011

அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி வெற்றி திருச்சி இடைத்தேர்தலில்




 திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி,  68,804 வாக்குகள் பெற்று, 14,608 வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திமுக சார்பில் போட்டியிட்ட கே.என்.நேரு 54,196  வாக்குகள் பெற்றார்.
 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு 7 ஆயிரத்து 178 வாக்குகள் வித்தியாசத்தில் கே.என்.நேருவை வென்றார் மரியம் பிச்சை.  இதையடுத்து அதிமுக அமைச்சரவையில் இடம்பிடித்தார்.  கார் விபத்தில் அவர் மரணம் அடைந்ததால் திருச்சி மேற்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.
அதிமுக சார்பில் பரஞ்சோதி களம் இறக்கப்பட்டார்.   திமுக சார்பில் மீண்டும் கே.என்.நேரு களம் இறங்கினார்.  திருச்சி
மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடைபெற்றது.     வாக்கு எண்ணிக்கை இன்று 20.10.2011 காலை தொடங்கியது.
 14 மேஜைகளில் 18 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 18 சுற்றுகளின் முடிவில் இறுதி நிலவரம் அறிவிக்கப்பட்டது.  
அதன்படி  பரஞ்சோதி 14, 608 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை: