வியாழன், 20 அக்டோபர், 2011

பெங்களூரில் ஜெ.வுக்கு எதிராக தலித்கள் போராட்டம் பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து


பெங்களூர்: பரமக்குடியில் தலித் சமுதாயத்தினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து பெங்களூர் பரப்பன்ன அக்ரஹாரா சிறக்கு வெளியே கர்நாடகத்தைச் சேர்ந்த தலித் அமைப்பு முதல்வர் ஜெயலலிதா பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்காக இன்று பெங்களூர் பரப்பன்ன அக்ரஹாரா சிறை வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்.
இந்த நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்த சமதா சைனிக் தளம் என்ற தலித் அமைப்பு கருப்புக் கொடியுடன், சிறைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், பரமக்குடியில் தலித் வகுப்பினர் மீது தமிழக போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தலித்கள் மீது நடத்தப்பட்ட இந்த அராஜக தாக்குதலுக்குப் பொறுப்பேற்று முதல்வர் ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரினர். போராட்டம் நடத்தியவர்களைப் போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை: