வியாழன், 20 அக்டோபர், 2011

கடாபி சுட்டுக்கொலை!:-Qadhafi killed, says field commander!

An anti-Gaddafi fighter points at the drain where Muammar Gaddafi was hiding before he was captured in Sirte October 20, 2011.

லிபிய இடைக்கால அரசாங்கப் படைகளுக்கும் கடபியின் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிப் போரில் காயங்களுக்கு உள்ளான கடாபி மரணித்துள்ளதாக அல்ஜசீரா தொலைக்காட்சி அறிவித்துள்ளது< டிரிபோலி : லிபிய அதிபர் கடாபி இன்று பிடிபட்டுள்ளதாக நேசனல் டிரான்சிசனல் கவுன்சில் கமாண்டர் தெரிவித்துள்ளார். லிபியாவை பல ஆண்டுகாலமாக ஆட்சி செய்து வந்த அதிபர் கடாபி மீது மக்கள் கொதித்து எழுந்ததன் விளைவாக அங்கு பெரும் புரட்சி வெடித்தது. லிபிய மக்களோடு இணைந்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் இணைந்து போராட்டத்தில் குதித்தன. இந்நிலையில், கடாபி தலைமறைவானார். அவரது எதிர்ப்பாளர்கள், லிபிய நாட்டில் கடாபிக்கு ஆதரவான பகுதிகளை ஒவ்வொன்றாக கைப்பற்றிய வண்ணம் இருந்தனர். அதேசமயத்தில், கடாபியின் உறவினர்கள் அவ்வப்போது கொல்லப்பட்டு வந்தனர். ஆனால், கடாபி மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்கும் முயற்சியில், நேட்டோ உள்ளிட்ட சர்வதேச படைகள் ஈடுபட்டிருந்தன. இந்நிலையில், கடாபி பிறந்த இடமான ஷிர்தே நகரில், நேட்டோ படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு நின்றுகொண்டிருந்த வாகனம் ஒன்றில், காயமடைந்த நிலையில் ஒருவர் மீட்கப்பட்டார். பின், அவர் அதிபர் கடாபி என்பதை நேசனல் டிரான்சிசனல் கவுன்சில் கமாண்டர் உறுதி செய்தார்.
இந்த தகவலை லிபியா லில் ஹரார் டிவி உறுதி செய்துள்ளது. கடாபியன் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடாபி இறந்துவிட்டார் என்று நேட்டோ படைகள் கூறிவருவது, அவரது ஆதரவாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.சுட்டுக்கொலை வெற்றிக் கொண்டாட்டம் : கடாபி பிடிபட்டதையடுத்து, அவரது எதிர்ப்பாளர்கள், நாட்டின் பல இடங்களில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடைசி வார்த்தை : கடாபி,, படையினரிடம் பிடிபடும் நிலையில், சுடாதீர்கள், சுடாதீர்கள் என்று கூறியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.
அதனையும் மீறி அவர்கள் சுட்டதில், கடாபி பலியானதாக சர்வதேச படையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தகவலை எந்த தகவலும் இதுவரை உறுதிசெய்யப்படடவில்லை.

அமெரிக்கா மறுப்பு : கடாபி பிடிபட்டுள்ளாரா என்பது அறுதியிட்டுக் கூற முடியாத நிலையில், அவர் கொல்லப்பட்டாரா? என்ற கேள்விக்கு எவ்வாறு பதிலளிக்க முடியும் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது<

கருத்துகள் இல்லை: