கிழக்கில் சம்பூர் அனல்மின்நிலையத்துக்குத் தேவையான காணி எடுக்கப்பட்ட பின்னர் எஞ்சிய பகுதிகளில் மக்கள் மீளக்குடியேற்றப்படுவார்கள். அதுவரை அவர்கள் தற்போதுள்ள இடங்களிலேயே இருக்கலாம் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிழக்கில் மட்டுமல்ல கெரவலப்பிட்டிய, கொத்மலை, நுரைச்சோலை போன்ற பகுதிகளிலும் காணிகள் எடுக்கப்பட்டன. அபிவிருத்திப் பணிகளுக்காக காணிகள் எடுக்கப்படுகின்றன. அதிவேக பாதை அமைப்பின் போதும் காணிகள் எடுக்கப்பட்டன. காணிகள் எடுக் கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப் படுகிறது.
இதேபோன்றுதான் கிழக்கில் சம்பூரிலும் இந்திய அரசின் உதவியுடன் அனல்மின் நிலையத்துக்கு காணி பெறப்படவுள்ளது. இப்போது அனல் மின்நிலையம் அமைப் பது தொடர்பாக இந்திய அரசுடன் இறுதித்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.இதற்குரிய காணி பெறப்பட்ட பின்னர் எஞ்சிய பகுதிகளிலும் மக்கள் மீள்குடிய மர்த்தப்படுவார்கள்.
கிழக்கில் சுமார் 3 இலட்சத்து 70 ஆயிரம் மக்கள் யுத்தத்தின் பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்டுவிட்டனர். இப்போது நீங்கள் குறிப்பிடும் 1700 குடும்பங்களே எஞ்சியுள்ளன. எனவே மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் வீதத்தை ஒப்பிட்டுப்பாருங்கள் எனவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் சபை ஒத்தி வைப்பு வேளைப் பிரேரணையை ஆரம் பித்துவைத்துப் பேசும்போது, சம்பூரில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படாமலிருப்பது குறித்து கேள்வியெடுப்பினார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.
சம்பூரில் 1128 ஏக்கர் நெற்காணிகள் உட்பட 2795 ஏக்கர் காணியில் மக்கள் மீளக்குடியேற முடியாமல் உள்ளனர். பரம்பரை பரம் பரையாக வாழ்ந்த மண்ணில் வாழமுடியாத நிலையில் மக்கள் திண்டாடுகின்றனர்.
இந்திய அரசுடன் நான் பேசினேன், இந்தியப் பிரதமருடனும் நான் பேசினேன். இந்தியா இந்த மக்களைத் துரத்திவிட விரும்பவில்லை. இந்த நிலையில் இன்று சம்பூரில் மீளக்குடியேற முடியாமல் இடம்பெயர்ந்துள்ள மக்களைத் தெரிவுசெய் யப்பட்ட சில இடங்களுக்கு அனுப்ப முயற்சிகள் நடைபெறுகின்றன. அவ்வாறு போக மறுத்தால் அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் நிறுத்தப்படும் எனவும் அச் சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
அபிவிருத்தி தேவைதான், அனல் மின்நிலையம் தேவைதான். அது கூடாது என நான் கூறவில்லை. மின் உற்பத்திக்காக நிலங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்களும் ஒத்துழைப்பு வழங்குகிறோம். ஆனால் உங்கள் மின்நிலையத்துக்குக் காணி எடுக்கும்வரை அந்த மக்கள் அங்கேயே இருக்கட்டும். எவ்வளவு காணி எடுக்கப்படு கிறதோ எடுத்துவிட்டு எஞ்சிய பகுதிகளில் நீங்கள் மக்களை மீளக்குடியமர்த்தவேண்டு மென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. இரா.சம்பந்தன் தனது சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையில் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக