புதன், 19 அக்டோபர், 2011

புதுடில்லி – கொழும்பு இடையே இந்த விவகாரமும் ‘கதைக்கப்படுகிறது’!!

Viruvirupu,
புதுடில்லி, இந்தியா: இந்திய மாநிலங்களில் சிலவற்றில் போதிய மின்சாரம் இன்மையால் மின்வெட்டு அமலில் இருக்க, ஸ்ரீலங்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. அரசு நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் முலமாகவே இந்த வர்த்தகம் நடைபெறவுள்ளதாக தெரிய வருகின்றது.
பவர் கிரிட் கார்ப்பரேஷனின் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவரை கோட் பண்ணி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது வால் ஸ்ட்ரீட் ஜேர்னல். ஸ்ரீலங்காவிலும், பங்களாதேஷிலும் லோக்கல் நிறுவனங்களை செட்டப் பண்ணும் பணியில் இந்திய அரசு நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. அதாவது, பவர் கிரிட் (ஸ்ரீலங்கா) லிமிட்டட் என்பது போன்ற பெயரில், லோக்கல் நிறுவனம் ஸ்ரீலங்காவில் பதிவாகும்.
லோக்கல் நிறுவனம் செட்டப் பண்ணப்பட்ட பின்னர், அந்த நிறுவனமே, சம்மந்தப்பட்ட நாடுகளுடன் தமது வர்த்தக டீலிங்கை வைத்துக் கொள்ளும். லோக்கல் நிறுவனத்தை நிர்வகிக்க இந்தியாவில் இருந்து அதிகாரி ஒருவர் அனுப்பி வைக்கப்படுவார்.

‘பொது-தனியார்’ செக்டர்களின் ஜாயின்ட் வெஞ்சர் மூலமாகவே இந்தியாவில் இருந்து மின்சாரம் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக தற்போது திட்டங்கள் உள்ளன. ‘பொது-பொது’ ஜாயின்ட் வெஞ்சர் இந்த விவகாரத்தில் சாத்தியமில்லை என்பதற்கு அரசியல் காரணங்கள் உள்ளன.
மத்திய அரசில் வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்புடைய வர்த்தக நடவடிக்கையாகவே இந்த முயற்சி நடைபெற உள்ளதாக டில்லி வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே கடந்த முறை புதுடில்லி வந்தபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான பல ‘பொது-தனியார்’ செக்டர்களின் ஜாயின்ட் வெஞ்சர் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
இந்திய மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்கவே, மின்சார ஏற்றுமதி வர்த்தக புராஜெக்ட் பரிசீலிக்கப் படுவதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியல்வாதிகளுக்கு இந்த விவகாரம் பற்றி ஏதும் தெரியவில்லை போலிருக்கிறதே.. தெரிந்திருந்தால் மத்திய அரசுக்கு நாலு கடிதங்கள், மாநில அளவில் இரண்டு போராட்டங்கள் என்று தொடங்கியிருக்க வேண்டுமே!

கருத்துகள் இல்லை: