வெள்ளி, 21 அக்டோபர், 2011

10 மேயரும் அ.தி.மு.க.,தான் - தி.மு.க., மீது அனுதாப அலை இல்லை -மவுசு குறைந்த தே.மு..தி.க.,

சென்னை: தமிழகத்தில், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 759 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல், கடந்த 17, 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக, பெரிய அளவில் வன்முறை ஏதுமின்றி நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, மாநிலம் முழுவதும் 822 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை துவங்கியது. தற்போதைய நிலவரப்படி சென்னை, திருச்சி, கோவை, மது‌‌‌ரை, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், வேலூர் என 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க., முன்னிலை வகிக்கிறது. வேலூர் மாநகராட்சியில் எண்ணிக்கை துவங்கிய நேரத்தில் மட்டும் தி.மு.க., முன்னிலை வகித்தது.


கடலூர் , கிருஷ்ணகிரி, கரூர், கீழக்கரை, பத்மநாபபுரம், விருதுநகர், சாத்தூர், திருவள்ளூர், உடுமலை, , பெரியகுளம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஓசூர், தாம்பரம், மேட்டூர், உள்ளிட்ட நகராட்சிகளில் அ.தி.மு.க,முன்னிலை வகிக்கிறது. ஆவடி, வேதாரண்யம், அரக்கோணம் நகராட்சிகளில் தி,மு.க., முன்னிலை வகிக்கிறது. நாகர்கோவில் நகராட்சியில் பா.ஜ., முன்னிலை வகிக்கிறது.குழித்துறை நகராட்சியில் மார்க்., கம்யூ., முன்னிலை வகிக்கிறது. நகராட்சி பேரூராட்சி மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் பெரும்பாலான இடங்களை அ.தி.மு.க,. கைப்பற்றி வருகிறது.

சென்னை தபால் ஓட்டு தே.மு.தி.கவுக்கு- 0 : சென்னை: சென்னை மாநகராட்சியில் முதலில் எண்ணப்பட்ட மொத்தம் 96 தபால் ஓட்டுக்களில் தி.மு.க.,வுக்கு 52, அ.தி.மு.க.,வுக்கு 35, காங்- 1 , பா.மக.,1 ம.தி.முக., 1, செல்லாதவை 6 தே.மு.தி.க.,வுக்கு ஒரு ஓட்டு கூட இல்லை.

சைதை துரைசாமிக்கு குவிந்த ஓட்டுக்கள்: சென்னையில் தற்போது எண்ணி முடிக்கப்பட்ட ஓட்டுக்களில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 521 ஓட்டுக்களை அ.தி.மு.க., வேட்பாளரர்சைதை துரைசாமியும், தி.மு.க., வேட்பாளர் மா.சுப்பிரமணியன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து ஆயிரத்து 600 ஓட்டு்‌க்களும், தே.மு..தி.க., வேட்பாளர் வேல்முருகன் 1 8ஆயிரம் ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.காங்கிரஸ் வேட்பாளர் 7 ஆயிரம் ஓட்டுக்களும் பெற்றுள்ளனர். சைதை துரைசாமி 75 ஆயிரம் ஒட்டுக்கள் வித்தியாசத்தில் உள்ளார்.

தே.மு.தி.க., ஒரு நகராட்சியையாவது பிடிக்குமா? நடந்து முடிந்த தேர்தலில் மேயர் ஒரு இடத்திலும் பிடிக்க முடியாத நிலையில் உள்ளது. நகராட்சியில் 17 வார்டு கவுன்சிலர் பதவியையும், 148 பேரூராட்சி கவுன்சிலர் பதவியையும் பிடித்துள்ளது. தே.மு.தி.க., தனித்து நின்று தனது செல்வாக்கை நிரூபிக்க முடியாத நிலைதான் தற்போது.


மதுரையில் பல ஆயிரம் ஓட்டுக்கள் அ.தி.மு.க., முன்னிலை: மதுரை மாநகராட்சியில் 20 ஆயிரம் ஓட்டுக்கள் கூடுதலாக ‌பெற்று மேயர் வேட்பாளர் ராஜன்செல்லப்பா முன்னி‌லை வகித்து வருகிறார். இங்குள்ள 100 வார்டுகளில் 75க்கும் மேற்பட்ட இடங்களை அ.தி.மு.க.,பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 முதல் 10 இடங்களை தி.மு.க.,வும், பிடிக்கும் என தெரிகிறது. பல இடங்களில் தே.மு.தி.க., 3 வது இடத்தை பிடித்திருக்கிறது. ராஜன் செல்லப்பா 79 ஆயிரத்து 547 ஓட்டுக்களும், தி.மு.க., ‌வேட்பாளர் பாக்கியநாதன் 36 ஆயிரத்து 697 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.


திருப்பூர் மாநகராட்சி : அ.தி.மு.க., வேட்பாளர் விசாலாட்சி, 40 ஆயிரத்து 076 ஓட்டுக்களும், தி.மு.க.,வேட்பாளர் செல்வராஜ், 16 ஆயிரத்து 444 ஒட்டுக்களும் தே.மு.தி.க., வேட்பாளர் தினேஷ்குமார், 5 ஆயிரத்து 185 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சி - சசிகலா வெற்றி : அ.தி.மு.க., வேட்பாளர் சசிகலா புஷ்பா ,ஓட்டு எண்ணிக்கையின் இறுதிச்சுற்றில் 65 ஆயிரத்து 50 ஓட்டுக்களும், தி.மு.க.,வேட்பாளர் பொன் இனியா 41 ஆயிரத்து 794 ஓட்டுக்களும், 3 வது இடத்தை பிடித்த ம.தி.மு.க., வேட்பாளர் பாத்திமா பாபு 29 ஆயிரத்து 336 ஓட்டுக்களும், தே.மு.தி.க.,வை சேர்ந்த ராஜேஸ்வரி 7 ஆயிரத்து 407 ஓட்டுக்கள் பெற்று 4 வது இடத்தையும் பெற்றனர். அ.தி.மு.க., வைசேர்ந்த சசிகலா 23 ஆயிரத்து 25 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கோவை மாநகராட்சியில் அபாரம்: அ.தி.மு.க., வேட்பாளர் 91 ஆயிரத்து 88 ஓட்டுக்களும், , தி.மு.க., வேட்பாளர் 27 ஆயிரத்து 573 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர். 3 வது இடத்தை ம.தி.மு,க., பிடித்து வருகிறது.

வேலூர் மாநகராட்சி முன்னிலை விவரம்: அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திகாயினி 3 ஆயிரத்து 943, ஓட்டுக்களும் , தி.மு.க., வேட்பாளர் ராஜேஸ்வரி, 3 ஆயிரத்து 849 ஒட்டுக்களும் பெற்றுள்ளனர்.

திருச்சி - சேலம் நிலவரம் : திருச்சியில் மேயர் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயா 54 ஆயிரத்து 458 ஓட்டுக்களும், தி.மு.க., வேட்பாளர் விஜய ஜெயராஜ் 27 ஆயிரத்து 290 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர். சேலம் மாநகராட்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் 19 ஆயிரத்து 625 ஓட்டுக்கள் வித்தியாசசத்தில் முன்னணியில் உள்ளார். சவுண்டப்பன்( அ.தி.மு.க.,) 40 ஆயிரத்து 317 ஓட்டுக்களும், கலையமுதன் ( தி.மு.க.,) 20 ஆயிரத்து 692 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.

திருநெல்வேலி மாநகராட்சி : அ.தி.மு.க., வேட்பாளர் விஜிலா 18, 952 ஓட்டுக்களும் தி.மு.க., வேட்பாளர் சுப. அமுதா 12 ஆயிரத்து 716 , ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதம் வாங்கிய அ.தி.மு.க., : இம்மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிகளை அதிமுக வேட்பாளர்கள் கைப்பற்றி உள்ளனர். கொடைக்கானல் நகராட்சி மன்ற ‌தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.எஸ்.கோவிந்தன் வெற்றி பெற்றுள்ளார். இதே போன்று நிலக்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சேகரும், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தண்டபாணியும், நத்தம் பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் விஜயலட்சுமியும், பண்ணைக்காடு பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சண்முகசுந்தரமும் வெற்றி பெற்றுள்ளனர்.

25 ஆண்டுகளாக காங்கிரஸ் தக்க வைத்திருந்தது: ராஜபாளையம் நகராட்சி தலைவர் வேட்பாளராக அ.தி.மு.க. வின் தனலெட்சுமி வெற்றி பெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்டகாங்கிரஸ் கட்சியின் சுப்புராம் தோல்வியுற்றார். தனலெட்சுமி, 34,769ஓட்டுக்கள் பெற்று 21741 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்நகராட்சியை கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ் தக்க வைத்திருந்தது. இப்போது அ.தி.மு.க. பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அதிகபட்சமாக சேலத்தில் 59, வேலூரில் 48, திண்டுக்கல் 41, விழுப்புரம், திருநெல்வேலி 40, சென்னையில் 18 ஓட்டு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்ட தேர்தலில், ஒரு கோடியே 68 லட்சத்து 518 பேரும், இரண்டாம் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 91 லட்சத்து 86 ஆயிரத்து 975 பேரும் ஓட்டளித்து உள்ளனர். தேர்தலில் பலமுனைபோட்டி நிலவியதால் வெற்றி யாருக்கு என்பதை கணிக்க முடியவில்லை. ஓட்டு எண்ணிக்கை மையங்களில்பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

தேர்தல் முடிவுகளை வெளிப்படையாக வெளியிடுவதற்கு மேலும் பல அதிரடி உத்தரவுகளையும் மாநில தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது. இதனிடையே, ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது போன்று ஓட்டு எண்ணிக்கையும் அமைதியாக நடக்குமா என்ற சந்தேகம் தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க., உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு எழுந்துள்ளது.

சென்னை லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடியை பார்வையிட வந்த மாநில தேர்தல் கமிஷனர் அய்யரிடம் நிருபர்கள் இது குறித்து கேட்டபோது, "மாநிலம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கை விவரங்கள் வீடியோ பதிவும், வெப்-கேமரா மூலம் கண்காணிப்பும் செய்யப்படவுள்ளன. பத்திரிகையாளர்களுக்கு தகவல் அளிக்கும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை நேர்மையாகவும், சுதந்திரமாகவும், நியாயமாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. என்றார்.

கருத்துகள் இல்லை: