உலகின் மிகக் கொடிய பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் போன்று அவர் வெள்ளைக்கொடியுடன் கிளர்ச்சிப்படைகளிடம் சரணடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது !
லிபியத் தலைவர் கேணல் மொஹம்மர் கடாபி லிபிய கிளர்ச்சிப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடாபியின் பிறந்த இடமான சேர்டே பகுதியில் வைத்து அவர் பிடிபட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. 1969ம் ஆண்டு லிபியாவின் தலைவரான கேணல் கடாபி தொடர்ச்சியாக 42 ஆண்டுகள் லிபியாவை ஆட்சி செய்து வந்தார். அண்மையில் கடாபி பதவி விலக வேண்டுமென அந்த நாட்டுக் கிளர்ச்சிக் குழுக்கள் வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடாபி பதவி விலக வேண்டும் என்ற கிளர்ச்சிக் குழுவின் கோரிக்கைக்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஆதரவு வழங்கி கடாபியின் படைகள் மீது நேட்டோ படைகளை அனுப்பி தாக்குதல்களும் நடத்தின. பிந்திய தகவல்களின்படி லிபிய நாட்டின் தலைவர் கேணல் மொஹம்மர் கடாபி கிளர்ச்சிப் படையினரால் கொல்லப்பட்டுவிட்டதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து லிபியத் தலைநகர் திரிபோலியில் மக்கள் ஆரவாரக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்கள் ஹோன் சத்தம் செய்தும், படையினர் துப்பாக்கி வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தும் ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கேணல் கடாபி கிளர்ச்சிப் படைகளின் தாக்குதலினாலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக