சம்பந்தன், ஆனந்த சங்கரி போன்றோர் இணைந்து செயற்படுவது தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கல்ல. மாறாக நாட்டையும் மக்க ளையும் குழப்புவதற்கே என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மக்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதைப் பொறுக்காது அவர்கள் கிழக்கு மக்களை குழப்பும் குறுகிய அரசியல் செயற்பாடுகளில் இறங்கி யுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வவுணதீவில் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற நீர் விநியோ கத்திட்ட ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட
இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய முதலமைச்சர்:
கிழக்கு மாகாணம் பாரிய முன்னேற்றம் கண்டு வருகிறது. மூவின மக்களும் இங்கு ஐக்கியமாக வாழ்கின்றனர். அரசியல் செயற் பாடுகளிலும் நாம் சில விட்டுக்கொடுப்புகளுடன் செயற்பட்டு வருகின்றோம். இதனைக் குழப்பும் வகையிலேயே ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு நடவடிக்கை எனக் கூறி அவர்கள் மக்களை திசை திருப்ப முயல்கின்றனர். மக்கள் எதற்கும் ஏமாறக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக