மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிப்பதன் மூலமே நாட்டு மக்கள் அனைவரும் சம உரிமையுடனும், மன நிறைவுடனும் சகல மத, இன மக்களுடன் நட்புறவுடன் வாழ முடியுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ள கருத்து உண் மையிலேயே யதார்த்தபூர்வமான, நாட்டின் மேம்பாட்டுக்காக முன் வைத்த ஒரு சிறந்த யோசனையாகும்.
தற்போது தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சராக இருந்துவரும் வாசுதேவ நாணயக்கார 1960-70ம் ஆண்டு தசாப்தங்க ளில் லங்கா சமசமாஜக் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவராக இருந்த போது, மொழிகளுக்கு சம உரிமை கொடுத்தால்தான் நாட்டில் உண்மையான இன ஐக்கியமும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுமெ ன்று பலதரப்பட்ட போராட்டங்களை அன்றைய அரசாங்கங்களுக்கு எதிராக மேற்கொண்டு வந்திருக்கிறார்.
அவ்விதம் தேசிய மொழிகளில் ஆர்வமும் அபிமானமும் கொண்ட ஒரு வரே தேசிய மொழிகளுக்கு பொறுப்பான அமைச்சராக சிறந்த சேவை யாற்ற முடியும் என்பதை நன்கு உணர்ந்து, சமயோசிதமாக அத்துறை க்கு பொறுப்பான அமைச்சராக வாசுதேவ நாணயக்கார அவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்தார்.
லங்கா சமசமாஜக் கட்சியின் பெருந் தலைவராகவும், சட்ட மேதையாகவும் விளங்கிய டாக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வா, 1950ஆவது ஆண்டு தசாப்தத்திலேயே ஒரு யதார்த்தபூர்வமான கருத்தை தெரிவித்தார். அந் தக் கருத்து இன்று இலங்கையில் மொழிப் பிரச்சினை மூலம் ஆரம்ப மாகி இனப்பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்து, இறுதியில் பயங்கர வாதமாக மாறியமைக்கும் ஒரு பொருத்தமான கருத்தாக இருக்கின் றது.
நாட்டில் ஒரு மொழி மாத்திரம் அரச கரும மொழியாக இருந்தால், நாடு பிளவுபடும். இரண்டு மொழிகள் நாட்டின் அரச கரும மொழிகளாக இருந்தால் நாடு என்றுமே பிளவுபடாமல் வலுவடைவதுடன், மக்களி டையே உண்மையான சகோதரத்துவமும், நட்புறவும் தலைத்தோங்கும் என்று அந்தப் பெரியவர் டாக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வா அன்று எங்கள் நாட்டு அரசியல்வாதிகளுக்கு முன் எச்சரிக்கை செய்திருந் தார்.
டாக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வாவின் அந்த எச்சரிக்கைக்கு எங்கள் நாட்டின் அரசாங்க, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் செவிமடுத்து, அத ற்கு ஏற்புடைய வகையில் இரு மொழிக் கொள்கையை வகுத்திருந் தால் நாடு இன்றைய அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்க முடியாது.
கடந்த கால அனுபவங்களை நன்கு பகுப்பாய்வு செய்த, மண் வாசனை கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டுக்கு இரு மொழிக் கொள்கையை விட மும்மொழிக் கொள்கை உகந்ததாக இரு க்குமென்று தீர்மானித்திருக்கிறார்.
ஜனாதிபதி அவர்களின் இந்த இலட்சியக் கனவை நிறைவேற்றும் பணியை ஏற்றுக் கொண்டுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பாடசாலைக ளில் தமிழ், முஸ்லிம், சிங்கள பிள்ளைகள் அனைவருக்கும் கட்டாய மாக ஆங்கிலக் கல்வியை புகட்டும் அதே வேளையில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு சிங்கள மொழியையும், சிங்கள மொழி மூலம் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும் கற் பிக்கும் நடைமுறையை இப்போது கல்வி அமைச்சர் பந்துல குணவர் தனவின் பூரண ஒத்துழைப்புடன் தீவிரமாக அமுல் நடத்தி வருகிறார்.
இது மட்டுமன்றி, அரசாங்க ஊழியர்களுக்கும் இதே முறையில் தமிழ் உத்தியோகத்தர்களுக்கு சிங்கள மொழியையும், சிங்கள உத்தியோகத் தர்களுக்கு தமிழ் மொழியையும் கற்பிக்கும் நடைமுறையையும் ஏற் படுத்தியுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மக்களுடன் நாளா ந்தம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையிலுள்ள தபால் சேவை உத்தியோகத்தர்கள், புகையிரத சேவை உத்தியோகத்தர்கள் மற் றும் அரசாங்க திணைக்களங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் ஆகி யோருக்கும் இந்த மும்மொழிக் கொள்கையில் பணியாற்றுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
குறிப்பாக தமிழ், சிங்கள மொழிப்பயிற்சி அரசாங்க ஊழியர்களுக்கு அவ சியம் என்ற கருத்தை ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்திய வண்ணம் இருக்கிறார். அதனால் தான் அவர் எங்கு சென்றாலும் குறிப்பாக தமிழ் பிரதேசங்களுக்கும், மலையகத்திற்கும் சென்றால் ஒரு சில வார் த்தைகளையாவது தமிழில் பேச தயங்குவதில்லை. ஒரு சிங்கள அர சியல்வாதி தூய தமிழில் பேசுவது கஷ்டமாக இருந்தாலும், ஜனாதிபதி அவர்கள் தன்னுடைய வேலைப்பளுவையும் மறந்து தமிழ் மொழியை கற்றுக் கொள்ளும் முயற்சியில் இப்போது இறங்கியிருக்கிறார்.
ஜனாதிபதியின் இந்த முன்மாதிரியைப் பார்த்து நாட்டு மக்கள் அனைவ ரும் சிறுவர்களாகவோ, இளைஞர்களாகவோ, நடுத்தரவயதை அடைந் தவர்களாகவோ அல்லது முதியவர்களாகவோ இருந்தாலும் கூட மும் மொழி தேர்ச்சியில் குறிப்பாக, கட்டாயமாக தமிழ், சிங்கள மொழித் தேர்ச்சியில் ஆர்வம் காட்டுவது மிகவும் அவசியமாகும்.
ஆங்கில அறிவும், தகவல் தொழில்நுட்ப அறிவும் இன்றைய உலகில் அத் தியாவசியமாக இருந்து வருவதனால் அரசாங்கப் பாடசாலைகளில் ஆங்கில மொழிப் போதனையில் ஈடுபட வேண்டிய ஆசிரியர்களு க்கு விசேட பயிற்சி திட்டங்களையும் கல்வி அமைச்சு இப்போது மேற் கொண்டு வருகின்றது. இவற்றுடன் சர்வதேச பாடசாலைகளில் ஆங் கில மொழி அறிவுக்கு ஒரு உந்து சக்தியாக நாட்டில் இன்று திகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இவ்விதம் நாட்டு மக்களுக்கு மும்மொழி அறிவை புகட்டும் ஜனாதிபதி அவ ர்களின் இலட்சியக் கனவு கூடிய விரைவில் நிறைவேறும் என்பதில் நாம் அசையாத நம்பிக்கை கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக