சனி, 22 அக்டோபர், 2011

நடிகை ஸ்ரீவித்யாவின் சொத்துக்கள் கலாஷேத்ராவிடம் ஒப்படைக்கப்படும்: கேரள அமைச்சர்


நடிகை ஸ்ரீவித்யாவின் சொத்துக்கள் அவரது உயில்படி விரைவில் கலாஷேத்ரா அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என்று கேரள அமைச்சர் கணேஷ் குமார் தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் நடிகை ஸ்ரீவித்யா பெயரில் விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் மோகன்லால், ஜெகதி ஸ்ரீகுமார், தயாரிப்பாளர் ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 2011 ம் ஆண்டில் சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கபட்ட ஸ்வேதா மேனனுக்கு கேரள கலாச்சார அமைச்சர் கே.பி.கணேஷ்குமார் ஸ்ரீவித்யா விருது வழங்கினார்.
இந்த விழாவில் அவர் பேசுகையில், "இன்று நடிகைகளை திரையில் பார்க்கும் போதும் நேரில் பார்க்கும் போதும் எனக்கு ஸ்ரீவித்யாவை பற்றிய நினைவுகள்தான் வருகின்றன.

தனது சொந்த வாழ்வில் அவர் பட்ட கஷ்ட நஷ்டங்கள் திரையில் நடிக்கும் போதோ, நேரில் அவரை பார்க்கும் போதும் இந்த உலகில் வாழ ஆசைப்பட்டார்.
கொடிய புற்றுநோய் அவரை பலி வாங்கிவிட்டது. திரையுலகில் தனது நடிப்பால் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துகள் வீணாகக் கூடாது என்று அவர் விரும்பினார்.
கலையை வளர்க்கும் அமைப்பினருக்கே அதை வழங்கிவிட வேண்டும் என்று நினைத்தார். அதற்காக பராமரிப்பு பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்.<
ஸ்ரீவித்தியாவின் சொத்துக்களுக்கான அனைத்து ஆவணங்களும் இப்போது கேரள அரசிடம் உள்ளது. விரைவில் அவை கலாசேத்ரா நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்படும். ஸ்ரீவித்யா நினைவாக கலாசேத்ராவில் இருந்து கலை வளர்க்கும் தலைமுறைகள் உருவாக வேண்டும்," என்றார்.

கருத்துகள் இல்லை: