திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 13ம் தேதி நடைபெற்றது. இத்தொகுதியில் 2.08 லட்சம் வாக்காளர்களில் 1,27,455 பேர் வாக்களித்தனர். இதில் ஆண்கள் 63, 360, பெண்கள் 64 ஆயிரத்து 95 பேர். சதவீதம் 61.15 ஆகும். வாக்கு பெட்டிகள் திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 3 மணி நேரத்தில் யாருக்கு வெற்றி என்பது தெரிந்து விடும்.
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடஉள்ள அலுவலர்களுக் கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் நேற்று நடைபெற்றது.
அப்போது கலெக்டர் ஜெயஸ்ரீ, ’’சாராநாதன் கல்லூரியில் 240 மின்னணு வாக் குபெட்டிகளும் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளது.
20ம் தேதி(நாளை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ண 14 டேபிள்கள் போடப்பட்டுள்ளது. 18 ரவுண்டுகளாக வாக்குகள் எண்ணப்படுகிறது.
18 வது ரவுண்டில் கடைசி 2 இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப் படும். இந்த பணியில் ஈடுபடவுள்ள 45 அலுவலர்கள் காலை 6 மணிக்கு முன்னதாகவே மையத்துக்கு வரவேண்டும். செல்போன் உபயோகிக்கக்கூடாது.
ஐடி கார்டு இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். லோக்கல் போலீஸ், ரிசர்வ் போலீஸ், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் என மூன்றடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
ஒவ்வொரு டேபிளுக்கும் ஒரு கண்காணிப்பாளர், வாக்கு எண்ணும் உதவியாளர், நுண் பார்வையாளர் என 3 பேர் இருப்பார்கள். ஒவ்வொரு டேபிளில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை பணி வீடியோ எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக