சென்னை, இந்தியா: இன்னமும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்து சேரவில்லை என்றாலும், இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தனக்கு அரசியலில் இருந்த இமேஜை இழக்கப் போகின்றது தே.மு.தி.க.
இதுவரை வெளியான முடிவுகள் எதுவுமே இவர்களுக்கு சாதகமாக இல்லை.
ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் தற்போதைய நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னணியில் இருக்கும் எந்தவொரு பகுதியிலும், தே.மு.தி.க. வேட்பாளர்களால் இனி ஓவர்-டேக் பண்ண முடியாத அளவில் உள்ளன ஓட்டு வித்தியாசங்கள்.
தற்போது இவர்கள் முன்னணியில் இல்லாத அனைத்து இடங்களிலும் தோல்வி என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவில் உள்ளது லீடிங் எண்ணிக்கை வித்தியாசம்.
நடைபெற்ற 10 மாநகராட்சி மேயர் தேர்தலில் எந்த இடத்திலும் தே.மு.தி.க. முன்னணியில் இல்லை. இனி முன்னணிக்கு வரும் என்ற நம்பிக்கையும் இல்லாதபடி 3வது, 4வது இடங்களில் உள்ளார்கள் தே.மு.தி.க. வேட்பாளர்கள். இதனால், மேயர் பதவிக்கு இவர்கள் வருவது இம்முறை கனவிலும் நடக்க முடியாதது.
மாநகராட்சி வார்டுகளில்கூட இவர்கள் முன்னணியில் இல்லை என்பது அடுத்த அடி. பாரதீய ஜனதா கட்சி கூட கோவையில் ஓர் இடத்திலும், தூத்துக்குடியில் ஓர் இடத்திலும் முன்னணியில் உள்ளது. ஆனால் சில வார்டுகளில் தே.மு.தி.க. இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஓட்டு எண்ணிக்கை முடிவில் ஒருவேளை ஓரிரு இடங்களில் வெற்றி பெற்றாலும் பெறலாம்.
நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு இதுவரை தே.மு.தி.க.வில் யாரும் வெற்றி பெறவில்லை. ஆனால், ஓரிரு இடங்களில் சான்ஸ் இருப்பதுபோல தெரிகின்றது.
நகராட்சி, மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர்கள் சிலர் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது கிடைத்துள்ள முடிவுகளின்படி, நகராட்சி உறுப்பினர்களாக 37 பேரும், பேரூராட்சி உறுப்பினர்களாக 228 பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கை முடிவுக்கு வரும்போது, இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.
மொத்தத்தில், ‘தேர்தல்களில் ஓட்டுக்களைப் பிரித்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் கட்சி’ என்று தே.மு.தி.க இதுவரை காலமும் வைத்திருந்த பெயரை இந்தத் தேர்தலோடு இழக்கப் போகின்றது. இவர்களால், அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை.
விஜயகாந்த் இருக்கும் திசையில் ஜெயலலிதா தற்போதைக்கு திரும்பிக்கூட பார்க்கத் தேவையில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக