சனி, 22 அக்டோபர், 2011

McDonald’s அறிவித்த லாபத்தின் ரகசியம் என்ன?

ஃபாஸ்ட் ஃபூட் செயின் McDonald’s அறிவித்த லாபத்தின் ரகசியம் என்ன?Viruvirupu

பாஸ்டன், அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய ஃபாஸ்ட்-ஃபூட் செயின் McDonald’s, மூன்றாவது காலாண்டில் தமது எதிர்பார்ப்பைவிட அதிக லாபம் பெற்றிருப்பதை அறிவித்துள்ளது. செப்டெம்பர் மாதத்துடன் முடிவடையும் 3வது காலாண்டு லாபமாக 1.51 பில்லியன் டாலர் (ஒரு ஷேருக்கு $1.45) அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது கடந்த வருட 3வது காலாண்டு லாபம், 1.39 பில்லியன் டாலர் அல்லது, ஷேருக்கு $1.29.
மற்றைய போட்டியாளர்களிடம் இருந்து மார்க்கெட் ஷேரின் ஒரு பகுதியைக் கைப்பற்றியுள்ள இந்த வளர்ச்சி, ஃபாஸ்ட்-ஃபூட் விற்பனை அதிகரிப்பாலேயே பெறப்பட்டுள்ளது. கடந்த மாத (செப்டெம்பர்) ஒட்டுமொத்த விற்பனை 6.6 சதவீதம் எகிறியுள்ளது.
பிரேக்-டவுனைப் பார்த்தால், அமெரிக்காவில் 5 சதவீதம், ஐரோப்பாவில் 6.9 சதவீதம், ஆசியாவில் 6.8 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. ஐரோப்பிய விற்பனை அதிகரிப்பின் பெரிய சதவீதம் ஜேர்மனியில் இருந்து கிடைத்துள்ளது.
ஆசியாவில் 6.8 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.
McDonald’s இந்த காலாண்டில் எதிர்பார்த்த விற்பனை அதிகரிப்பு 5.1 சதவீதம் மாத்திரமே! எதிர்பார்ப்பைவிட நடப்பு விற்பனை அதிகரித்து, லாபத்தை அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் விற்பனை அதிகரிப்புக்கு, 3வது காலாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மெனு, ஹை-மார்ஜின் பானங்கள் (காபி, ஃபுருட் ஸ்மூத்தீஸ்) மற்றும் ‘1 டாலர் சான்ட்விச்சுகள்’ ஆகியவையே காரணம்.
ஐரோப்பாவைப் பொறுத்தவரை, உணவகங்களை நவீனமயப்படுத்தியமையே அதிக கஸ்டமர்களை அழைத்து வந்தது என்கின்றது ஆய்வு.
“எதிர்பாராத லாபத்துக்கு காரணம், வெறும் சான்ட்விச்சுகளும் காபியும் மாத்திரமல்ல. கஸ்டமர்கள் என்ன வேண்டும் என்று கேட்டார்களோ, அவற்றை மெனுவில் சேர்த்துக் கொண்டதுதான்” என்கிறார், மைக்கல் யோஷ்ஹாமி. இவர் வர்த்தக ஆய்வு நிறுவனமான YCMNET அட்வைசரி பிரிவின் சி.இ.ஓ.
இந்த வருட ஆரம்பத்தில் McDonald’s நடாத்திய ஆய்வு ஒன்றில் கஸ்டமர்களில் அநேகர் கோரியிருந்தவை, சிறுவர்களுக்கான ஆரோக்கிய உணவு (ஹெல்தி கிட்ஸ் ஃபூட்) பெரியவர்களுக்காக பிரீமியம் காபி. இதில், முதலாவதை வழங்குவதில் சிரமம் கிடையாது. ஆனால், இரண்டாவதில்தான் சிக்கல்.
பிரீமியம் காபி என்று கூறப்படுவது, ஸ்டார்பக்ஸ் நிறுவனம் வழங்குவது போன்ற தரத்திலான காபி. McDonald’s வைத்திருக்கும் மெனுவின் விலைக்குள் பிரீமியம் காபியைக் கொண்டுவருவது சுலபமானதல்ல. ஆனாலும், விற்பனை விலையைவிட அதிக தயாரிப்பு செலவுடைய பிரீமியம் காபியை மெனுவில் இணைத்துக் கொண்டது McDonald’s.
அதில் விட்ட பணத்தை, வேறு ஏதோ விதத்தில் உங்களிடம் இருந்து எடுத்திருப்பார்கள். அதுதானே வியாபாரம்?

• “விறுவிறுப்பு.காம்” ஸ்டைல் பிடித்திருக்கிறதா? நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யலாமே!

கருத்துகள் இல்லை: