வெள்ளி, 21 அக்டோபர், 2011

அம்பானியை ஆட்டிப்படைக்கும் வாஸ்து!!உலகின் மிக காஸ்ட்லியான காலி வீடு!..




அன்டிலியா - முகேஷ் அம்பானியின் 27 அடுக்கு சொகுசு மாளிகை இது. மும்பையில் உள்ள இந்த அபாரமான பங்களாவில் 6 மாடி பார்க்கிங், 3 ஹெலிபேட்கள், சொகுசு திரையரங்குகள், தொங்கும் தோட்டங்கள், மெகா பார்ட்டி ஹால், கான்ஃபரன்ஸ் அறைகள் என ஒரு மினி நகரமே உள்ளடக்கியுள்ளது. இந்திய பணக்காரர்களில் யாருக்கும் இப்படியொரு மெகா வீடு கிடையாது.
கடந்த ஆண்டு இந்த வீட்டுக்கு கிரகப் பிரவேசம் நடத்தினர் முகேஷ் அம்பானி குடும்பத்தினர்.- இதுவரை இந்த வீட்டுக்கு அவர்கள் இடம்பெயரவில்லை.
காரணம்.... வாஸ்துதான்!
இந்த மாளிகையின் கிழக்குப் பக்கத்தில் அதிக ஜன்னல்கள் இல்லையாம். மேற்குப் பக்கம் மட்டும்தான் ஜன்னல்கள் உள்ளனவாம்.
இது வாஸ்துப்படி தவறான ஒன்று என்று கூறப்படுகிறது.

இதனால்தான் இதுவரை இந்த வீட்டுக்குள் வராமல், தங்களின் பழைய 14 அடுக்கு மாடி வீட்டிலேயே குடியிருக்கிறார்களாம் அம்பானி குடும்பத்தினர். இந்த வீட்டில் முகேஷ் அம்பானி குடும்பம் தவிர, தாயார் கோகிலா பென், தம்பி அனில் அம்பானி குடும்பம் என அனைவருமே தங்கியுள்ளனர், வெவ்வேறு தளங்களைப் பிரித்துக் கொண்டு.

இந்த வீட்டிலிருந்து கிளம்பினால் சென்டிமெண்ட்டாக ராசியாக இருக்காது என்று வேறு முகேஷுக்கு சொல்லப்பட்டிருப்பதால், அவர் தயங்கி வருகிறாராம்.

அதுமட்டுமல்லாமல், மும்பையின் பாதி மக்கள் தொகை பெரும் வறுமையில், நாளொன்றுக்கு ரூ 100-க்கு கூட வழியின்றி இருக்கும்போது, முகேஷ் அம்பானி இந்த ரூ 4000 கோடி ரூபாய் வீட்டில் தங்குவது, அவர்களின் சாபத்தைப் பெறுவது போல இருக்கும் என்று ஜோசியர்கள் கூறியுள்ளனராம்.

மேலும், டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவும், இப்படி ஒரு பிரமாண்ட வீட்டுக்கு குடிபோவதன் மூலம் எதை நிலைநாட்ட விரும்புகிறார் முகேஷ்? இதை விட, ஏழைகளுக்கு நிரந்தரமாகப் பயன்தரும் திட்டங்களை அவர் தொடங்கியிருக்கலாம் என்று வேறு கண்டித்துள்ளார்.

இதையெல்லாம் யோசித்த, முகேஷ், இந்த 27 மாடி வீட்டை இப்போது நண்பர்களுடன் சேர்ந்து விருந்துண்ண, கருத்தரங்குகள் நடத்த, படம் பார்க்க மட்டும் பயன்படுத்தி வருகிறாராம்!!

கருத்துகள் இல்லை: