ஞாயிறு, 19 டிசம்பர், 2021

ஆசிரியரின் பாலியல் அத்துமீறலால் மீண்டும் ஒரு மரணம்.. சென்னை மாங்காட்டில்

suicide

zeenews.india.com : சென்னை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11 வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை வீட்டில் அனைவரும் வெளியில் சென்றிருந்த நிலையில்  மாணவி மட்டும் வீட்டில் தனியாக  இருந்திருக்கிறார்
வெளியில் சென்றிருந்த மாணவியின் தாய் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கம்  தாழிட்டு இருந்ததாகவும் நீண்ட நேரம் கதவை தட்டியும்  திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து காவல் நிலையத்திற்கு  தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாங்காடு போலீசார்  மனைவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக KMC மருத்துவமனைக்கு 14.30 மணிக்கு உடலை  அனுப்பி வைத்தனர். இறந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

அதில் பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை என குறிப்பிட்டுள்ளார்.
எதனால் இந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யார் இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பள்ளி மாணவிகள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுப்பது பெற்றோர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: