tamil.indianexpress.com : மம்தா முயற்சியை புறந்தள்ளிய திமுக: டெல்லி கூட்டணி நிலைப்பாடு இதுதான்!
பாஜகவுக்கு எதிராக காங்கிரஸைத் தவிர்த்து மம்தா பானர்ஜி மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியை புறந்தள்ளும் விதமாக திமுகவின் முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலுவின் கருத்து அமைந்துள்ளது.
DMK refuse Mamata Banerjee, Mamata Banerjee Third Front farmin, DMK alliance confirm with congress,
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸைத் தவிர்த்து மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், மம்தாவின் முயற்சியை புறந்தள்ளும் விதமாக திமுக முரசொலியில் தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் திமுகவின் டெல்லி கூட்டணி காங்கிரஸ் கட்சியுடன் தான் என்று தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.
அண்மையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்தது, தேசிய அளவில் மாநிலக் கட்சிகளின் மூன்றாவது அணி அமைக்கும் ஊகங்களை எழுப்பியது. இந்த சூழலில்தான், திமுகவின் மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு, அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரிக்கக்கூடாது என்று கூறினார்.
நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட மூன்றாவது பெரிய கட்சியான திமுகதான், 2019 மக்களவைத் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அறிவித்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு திமுக தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தி, திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “பாஜகவை எதிர்த்துப் போராடி தோற்கடிக்க, தேசிய அரசியல் தொடர்பான பிரச்னைகளை முக்கியமாக ஒரே திட்டத்துடன் விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டும்.” என்று கூறினார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக கூட்டணி அமைக்க மம்தா பானர்ஜி மேற்கொண்ட முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்த திமுக பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர். பாலு, “மம்தா பானர்ஜியின் தனியாகச் செல்லும் முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரப்போவதில்லை. மாறாக அவருடய முயற்சி எதிர்க்கட்சிகளின் பொது எதிரியான பாஜகவுக்கே உதவியாக இருக்கும்.” என்று கூறினார்.
பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பை வலுப்படுத்துவது குறித்து பேசிய டி.ஆர். பாலு, “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, என்.சி.பி தலைவர் சரத் பவார் மற்றும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தேசிய அரசியலை விவாதிக்க பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒன்றாக விவாதிக்க அழைக்க முடியும்” என்று கூறினார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலின் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தனி வேட்பாளரை முன்னிறுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். காங்கிரஸுடனான கூட்டணி குறித்து திமுகவின் முரசொலி நாளிதழில் சமீபத்தில் வெளியான இரண்டு தலையங்கங்கள் உறுதி செய்கின்றன.
முரசொலி தலையங்கத்தில் இந்துத்துவா குறித்த ராகுல் காந்தியின் கருத்துகளையும், பாஜகவை ஒருமனதாக எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீதான மம்தா பானர்ஜியின் விமர்சனத்திற்குப் பிறகும், சந்திரசேகர ராவ் சந்திப்புக்கு முன்பும் இரண்டு தலையங்கங்களை முரசொலி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14-வது மாநில மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக சாடினார். ஜிஎஸ்டி வரிப் பங்குகளையோ, வெள்ள நிவாரணத்துக்கான நிதியையோ வழங்காமல், மாநில அரசுகளை கொத்தடிமைகளைப் போல கையேந்தும் நிலையில் வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
தேசிய அளவில், காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாக மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க மம்தா பானர்ஜி மேற்கொண்ட முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்த திமுக எம்.பி டி.ஆர். பாலு, “மம்தா பானர்ஜி தனியாக மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரப்போவதில்லை. மாறாக எதிர்க்கட்சிகளின் பொது எதிரியான பா.ஜ.க.வுக்கு இது ஓரளவுக்கு உதவியாக இருக்கும்.” என்று விமர்சனம் செய்தார்.
மேற்குவங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசிய அளவில் பாஜகவைத் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதே நேரத்தில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அண்மையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில்தான், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸைத் தவிர்த்து மம்தா பானர்ஜி மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியை புறந்தள்ளும் விதமாக திமுகவின் முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலுவின் கருத்து அமைந்துள்ளது. அதோடு, காங்கிரஸ் கட்சியுடன்தான் கூட்டணி என்ற திமுகவின் உறுதியான நிலைப்பாடும் வெளிப்பட்டுள்ளது. இதையேதான், திமுகவின் முரசொலி நாளிதழில் வெளியான 2 தலையங்கங்களும் உறுதிப்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக