Arul Ezhilan அந்தக் காலத்து அன்னா அசாரே!
பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், என்ன செய்தார்கள் என பக்கம் பக்கமாக எழுதலாம்.
கக்கன் என்ன செய்தார்?
“அவரு ரொம்ப எளிமையானவருங்க”
இதைத் தவிற இந்த முழு மூடர்களிடம் வேறு ஏதாவது கக்கனைப் பற்றி சொல்ல இருக்கிறதா? (சட்டியில் இருக்கணும் அல்லது சொல்கிறவன் மூளையில் இருக்கணும்) கக்கன் அந்தக் காலத்தில் வாந்த அன்னா அசாரே மோசமான அரசியல் தலைவர். நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாதவர். அவர் போலீஸ் மந்திரியாக இருந்த போதுதான் மொழிப்போர் தியாகிகள் கொல்லப்பட்டார்கள். தமிழகத்தின் அடிப்படையான சமூகக் கட்டமைப்பின் அஸ்திவாரம் இட ஒதுக்கீடு. அதில் முதன் முதலாக பொருளாதார அளவுகோலை நுழைத்து சிதைத்தவர் எமுஜியார் அந்த எம்ஜிஆரை ஆதரித்தவர் கக்கன்.
பொதுவாக அரசியலில் எதையும் சாதிக்காத மக்களுக்கு நல்லது செய்யாதவர்களைப் புகழ ஒரே ஒரு வரி போதும் “அவுரு ரொம்ப எளிமையானவருங்க”
இந்த நாட்டில் நாம் அனுபவிக்கும் உரிமைகளுக்காக போராடிய அண்ணல் அம்பேத்கர் எளிமையானவர் அல்ல ஆடம்பரமானவர் அதுதான் சரி . ஏன் ஒரு மனிதன் ஒரே டவுசரையும் ஒரே கதர் சட்டையும் வைத்துக் கொண்டு அலைய வேண்டுமா? ஒருவர் கதர்ச் சட்டை அணிகிறார் , அதுவும் ஒரே சட்டை அணிகிறார் என்பதெல்லாமா சாதனை?
எந்த நாம் தமிழர் அப்படி ஒரெ சட்டையுடன் அழுக்காக அலைகிறான். ஆனால் இவன்களுக்கு அரசியலில் ஒரு கிளு கிளுப்பு தேவைப்படுகிறது. அது போன்ற கிளு கிளுப்புகளுக்கு பயன்படுகிறவர்தான் கக்கன்ஜி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக