விகடன் : கோபாலபுரத்தில் சாய்பாபா... அதிசயம் நிகழ்ந்தது எப்படி?
அத்தி பூத்தது போல் எப்போதாவது சில அபூர்வ சந்திப்புகள் நிகழ்வது உண்டு. அப்படி ஓர் அபூர்வ சந்திப்பு கடந்த 20&ம் தேதி, சென்னை கோபாலபுரத்தில் நடந்திருக்கிறது!
கொள்கையிலும் நம்பிக்கையிலும் எதிரெதிர் துருவங்களாக இயங்கிவரும் முதல்வர் கலைஞர் அவர்களும் , புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவும் 20&ம் தேதி ஒருவரையருவர் சந்தித்து சுமார் முக்கால் மணி நேரம் அளவளாவி இருக்கிறார்கள்.
பகுத்தறிவையே தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கும் கலைஞரும் , பக்திமார்க்கத்தையே தன் வாழ்வியல் நெறியாகக் கடைப்பிடித்து வரும் சாய்பாபாவும் சந்தித்துக் கொண்டது& தமிழக அரசியல் களத்திலும் சரி, ஆன்மிக தளத்திலும் சரி... வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
முதல்வரின் கோபாலபுரம் வீட்டுக்கு வந்த சாய்பாபா, காரிலிருந்து இறங்கி வீல் சேரில் அமர்ந்து, முதல்வரின் அறைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அங்கு ஐந்து புகைப்படக்காரர்களும், ஐந்து தொலைக்காட்சி கேமராமேன்களும் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர். சாய்பாபா அறைக்குள் நுழைந்ததுமே முதல்வர் எழுந்து நின்று, அவரது கையைப் பற்றி வரவேற்றார். அவர் அருகில் இருந்த அவரது மனைவி தயாளு அம்மாள், பாபாவின் காலைத் தொட்டு வணங்கியபோது புகைப் படக்காரர்களுக்கு முக்கியமான போட்டோ ஒன்று கிடைக்க... அதைப் பார்த்து, ‘‘பாட்டி, பாட்டி’’ என்று பதறினார் தயாநிதி மாறன். முதல் வரோ தன் மனைவியை எந்த சலனமுமின்றி பார்த்துக் கொண்டிருந்தார்.
எப்படி நிகழ்ந்தது இந்த எதிரெதிர் துருவ சந்திப்பு?
தி.மு.க-வின் முக்கிய பிரமுகர் ஒருவர் இதற்கான பின்னணி குறித்து நம்மிடம் கிசுகிசுத்தார். ‘‘ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள் என எல்லோருமே சாய் பாபாவை தேடிப்போய் பார்ப்பார்கள். அதேபோல், ‘முதல்வர், பாபாவை சந்திக்க விரும்பினால் நேரம் ஒதுக்கத் தயார்’ என்று முதல்வர் அலுவலகத்துக்கு சாய்பாபா டிரஸ்டில் இருந்து தகவல் வந்தது. ஆன்மிகவாதியைத் தேடி பகுத் தறிவுத் தலைவர் ஒருவர் எப்படிப் போக முடியும்? ஆகவே ரொம்ப நாசூக்காக ‘முதல்வருக்கு நிறைய அப்பாயின்ட் மென்ட் இருக்கிறது’ என்று சொல்லித் தவிர்த்துவிட்டோம். ஆனால் அவர்கள் மீண்டும் வற்புறுத்தவே... விஷயம், அமைச்சர் தயாநிதி மாறனிடம் போனது. அவர் பாபா தரப்பு ஆட்களிடம், ‘பாபா விருப்பப்பட்டால் முதல் வரைச் சந்திக்கலாம்’ என பக்கு வமாக எடுத்துச் சொன்னார். அதன்பிறகு, அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை.
இதற்கிடையில் என்ன நடந் ததோ தெரியவில்லை... ‘பாபா முதல் வர் வீட்டுக்கு வருவார்’ என்று டிரஸ்டி யில் இருந்து தகவல் வந்தது. ஆக, இந்த விஷயத்தில் தலை வருக்கு ஏற்பட்ட சங்கடத்தை சாதுர்யமாக சரிசெய்தது, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்தான்’’ என்று சொன் னார்.
முதல்வர் வீட்டுக்கு பாபா வந்தது, தி.மு.க&வினரை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது. ‘‘சங்கராச்சாரியாரை காஞ்சி சங்கர மடத்துக்குத் தேடிப்போய்தான் அந்த அம்மா (ஜெயலலிதா) பார்த்தாங்க. இங்கே நம்ம தலைவரைத் தேடி சாய் பாபாவே வந்துட்டுப் போறாரு... அதான் நம்ம தலைவ ரோட பவரு!’’ என்று அவர்கள் புல்லரித்துக் கொண்டிருக் கின்றனர். அதேசமயம், நாத்திகவாதி ஒருவர் வீட்டுக்கு சாய்பாபா போனது, அவரது பக்தர்களை மனம் ஒடிய வைத்து விட்டதும் உண்மை.
மறுநாள் நேரு ஸ்டேடியம் உள்ளரங்கில் சாய்பாபாவுக்குப் பாராட்டு விழா நடந்தது. கவர்னர் பர்னாலா, மத்திய அமைச் சர்கள் லாலு பிரசாத் யாதவ், சிவராஜ் பாட்டீல் என ஏகப்பட்ட முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். ஆனால், ஆந்திர முதல் வர் ராஜசேகர ரெட்டி வரவில்லை. விழாவுக்கு வந்திருந்த தமிழக உள்துறை அமைச்சர் ஸ்டாலின், உடல்நல பிரச்னையால் பாதியிலேயே கிளம்பிவிட்டார்.
விழாவில் கலைஞர் பேசும்போது, ‘‘பாபா இலவச மருத்துவம், இலவச கல்வி என்று எத் தனையோ நல்ல உதவி களை செய்கிறார். அங்கே யும் இலவசம், இங்கேயும் இலவசம்... இலவசம் அதிகமாகக் கொடுத்தால், திவாலாகி விடும் என்று சொல்கிறார்கள். திவாலாக மாட்டோம், எடுக்க எடுக்க அன்பு குறையாது. அன்பு குறையவில்லை என்றால், ஆஸ்தியும் குறையாது. அந்த நம்பிக்கையோடுதான் நம்முடைய அருள்மிகு சாய்பாபாவும் தன்னுடைய பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறார்.
அதைத்தான் அவர் ‘ஆண்டவர் பணி’ என்று கருதுகிறார். இதைத்தான் நானும் ‘ஆளுகிறவன் பணி’ என்று கருதிக் கொண்டிருக்கிறேன். ஆண்டவன் பணிக்கும் ஆளுகிற வன் பணிக்கும் ஏறத்தாழ இப்படித்தான் ஒற்றுமை இருக் கிறது. இல்லாதவர்களுக்கு இலவச மாக வழங்குவதில் தவறில்லை. அதில் எந்த குற்றமும் இல்லை... மக்களுடைய கஷ்டங் களைப் போக்குகிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் துறவிகளைவிட மேலானவர்கள். இன்னும் சொல்லப் போனால் ஆண்டவனுக்கே ஒப்பானவர் கள்’’ என்ற கலைஞர் , ‘‘கடவுளை நான் ஏற்றுக் கொள் கிறேனா என்பது பிரச்னையல்ல... கடவுள் என்னை ஏற்றுக் கொள்கிற அளவுக்கு நான் நடக்கிறேனா என்பதுதான் பிரச்னை. நான் அப்படி நடந்துகொண்டால் கடவுள் இருந்தா லும் இல்லாவிட்டாலும் மக்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்’’ என்றார்.
சாய்பாபா பக்தர்களாக விழாவுக்கு வந்திருந்த அனைவரை யும் முதல்வரின் பேச்சு கவர்ந்தது.
‘‘பகுத்தறிவு, ஆத்திகம், நாத்திகம் என்பதையெல்லாம் தாண்டி, ‘மாநில மக்களுக்கு ஒரு நல்லது நடந்தால்... அது தான் உண்மையான மகேசன் பணி’ என்பதை மிக அழகாகச் சொல்லிவிட்டார் முதல்வர். நாட்டை ஆள்பவர் களுக்கு இருக்க வேண்டிய உச்சகட்டமான பக்குவம் இது. அவர் வீட்டுக்கு சாய்பாபா நேற்று சென்றதில் எங்களில் பலருக்கும் நெருடல் இருந்தது. ஆனால், இந்த விழாவுக்குப் பிறகு அந்த நெருடல் நீங்கிவிட்டது’’ என்றார்கள் விழாவுக்கு வந்திருந்தவர்கள்.
நன்றி-விகடன்
/>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக