பீட்டர் அல்போன்ஸ் : தென்னிந்தியாவில் உள்ள துறைமுகங்கள் விமான நிலையங்கள் எதுவும் தென்னிந்தியர்கள் கையில் இல்லை. தென்னிந்தியாவின் ரெயில்வே காண்டீன்கள் காண்ட்ராக்டுகள் எதுவும் தென்னியர்களுக்கு இல்லை... தபால் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஹரியானாவில் இருந்து அவர்கள் தமிழில் பரீட்சை தேறி 85 மாக்ஸ் பெற்று வேலைக்கு சேர்ந்துள்ளவர்கள். ஆனால் எவருக்கும் தமிழ் எழுத தெரியவில்லை .. முழுக்க முழுக்க எல்லாம் பறிபோய் கொண்டிருக்கிறது ..
காந்தி அடிகள் ஏன் பட்டேலை பிரதமர் ஆக்கவில்லை என்பதற்கு காந்தி சொன்னது : ஒரு குஜராத்தியரை பிரதமராக்கினால் நாட்டில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியும் .. நானும் ஒரு குஜராத்தி பனியாதான் என்றார்.
இதுதான் காமராஜரும் குஜராத்தி மொரார்ஜியை பிரதமர் ஆக்கவில்லை .. அவர்கள் வியாபாரிகள் நாட்டை சூறையாடிவிடுவார்கள்
சென்ற தேர்தலுக்கு முன்பாக 2005 juin கிருஷ்ணா கோதாவரி ஆற்றுபடுகையில் 20 Trillion cubic feet கனஅடி இயற்கை எரிவாயும் கண்டு பிடிக்கபட்டதாகவும் இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 2 இலட்சம் கோடி என்று மோடி அறிவித்தார் .
சவூதி அரேபியாவில் கூட இவ்வளவு இருக்குமா சந்தேகம்தான் . இந்த கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவால் இந்தியாவுக்கு வருடாவருடம் பத்தாயிரம் கோடி அன்னியசெலவாணிி வரும் என்று முழக்கினார் மோடி.
இந்த இல்லாத காஸ் கிணறுக்கு தீனதயாள் என்று பேரு வேற .
இந்த இயற்கை காஸ் எடுக்கும் நிறுவனம் அரசின் Gujarath natural gas 7000 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக அறிக்கை வருகிறது
கிருஷ்ணா கோதாவரி படுகையில் மட்டும் 19000 கோடி முதலீடு செய்து நஷ்டம் ஏற்ப்படிருப்பதாக சி எ ஜி அறிக்கை சொல்கிறது .
காஸ் இல்லாத ஒரு கம்பனி பத்தொன்பது ஆயிரம் கோடி நஷ்டம் என்றால் ..அந்த பணம் என் எங்கே போனது ?
ஒரு கனஅடி காஸ் கூட எடுக்காத ஒரு கம்பனி 19000 கோடி நஷ்டம் என்றால் அந்த பணம் எங்கே போனது? அதற்கு அடுத்த வருடம் நடந்த தேர்தலில் பஜக செலவு செய்த தொகை அது .
நீங்கள் யோசிக்க வேண்டும் .. இந்த கடனை சிபார்சு செய்தவர்தான் பின்பு மோடியால் ரிசேர்வ் பாங்க ஆளுநராக நியமிக்கக் பட்ட உர்ஜித் பட்டேல் ஆவார் .. இதெல்லாம் சில தரவுகள் மட்டுமே ,, இன்னும் ஏராளமான உண்மைகளை புட்டு புட்டு வைக்கிறார் பீட்டர் அல்போன்ஸ் ..
பேசவேண்டிய பேசவேண்டிய நேரம் இது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக