திங்கள், 20 டிசம்பர், 2021

FOXCON நிறுவனமும் நக்கி பிழைக்கும் அபாயகரமான குட்டி தலைவர்களும்

May be an image of one or more people, people standing, road and crowd

புகச்சோவ்  :  Foxcon  இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்.....!? FOXCON......!
       இந்தியாவின் பனாட்டு முதலாளிகள் நடத்தும் பெருநிறுவனங்களில் நடக்கும் அசம்பாவிதங்களின் போது, பெரு முதலாளிகள் எப்போதுமே அதற்கான இழப்பீட்டையும், இறந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளையும் பயத்தின் காரணமாக அங்கீகரிக்கவே முன்வருகின்றனர்.
அவர்கள் அந்நியராக இருப்பதால் கூடுதலாகவே செய்யத்தயாராகவுள்ளனர்.
      ஆனால், இங்கே நக்கிப்பிழைக்கும் அபாயகரமான ஒருவகை வர்க்கமுண்டு.
பெரும்பான்மையினரின் குட்டி தலைவர்கள், அப்பகுதியின் பெரும்பான்மை சாதிகள், அப்பகுதியின் வலுவான அரசியல் கட்சியினர். அப்பகுதியின் கூலிப்படை தலைமை ரவுடிகள், அப்பகுதியின் பிரபலமான வழக்குரைஞர்கள்,
அப்பகுதியின் மக்கள் செல்வாக்கைப்பெற்ற குழுத்தலைமைகள் போன்றவர்கள்.


         இந்தப்பொறம்போக்குகள் நிறுவனத்தில் செயலாளர்களை தொடர்புகொண்டு, அப்பிரச்சனையை எவ்வித பாதகமுமில்லாமல் முடித்துத்தருவதாக டீல்பேசுகிறார்கள்.
நிறுவனத்தாரோ! எப்படியாவது பிரச்சனை ஒழிந்தால்போதுமென நினைக்கின்றனர்.
அதற்காக எவ்வளவு பணம் செலவுசெய்யவும் தயாராகவுள்ளனர். இந்த இடைத்தரகு பொறுக்கிகள் நிறுவனத்திடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்கின்றனர்.

அதற்கு பிரதிபலனாக, நிர்வாகத்தை எதிர்த்து போராடுகிற தொழிலாளர்களையும், இடதுசாரிகளையும் சமரசத்திற்கு வரும்படி செய்கின்றனர். அல்லது மிரட்டிப்பார்க்கின்றனர். அதுவும் முடியவில்லையென்றால் அடிதடியிலும், கலவரத்திலும் ஈடுபடுகின்றனர். மேலும் வெளியிலிருந்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தருவோர்களிடம் தொடர்புகொள்கிற, நிறுவத்தின் சில தொழிலாளர்களுடைய வேலையை பறிக்கிற சூழலை உண்டாக்குகின்றனர்.
           தொழிலாளர்களின் எழுச்சியோ, கிளர்ச்சியோ, நிர்வாகிகளின் முதுகுத்தோலை உரித்துவிடும் என்கிற பயத்திலிருக்கும் முதலாளிகள், இந்த ரவுடிகளிடம் தங்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்கின்றனர். உண்மையில் என்ன நடக்கிறதென்றால், கோர்ட்டில் நஷ்ட ஈடுக்கான தீர்ப்பு வந்தால், நிறுவனத்திற்கு எவ்வளவு செலவாகுமோ! அதைவிட பத்துமடங்கு பணத்தை இந்த பொறம்போக்குகளுக்கு அள்ளித்தருகிறது முதலாளிவர்க்கம். இந்த ஏவலாட்களை சில இந்திய நிறுவனங்கள், நிறுவனத்தை ஆரம்பிக்கும்போதே தயார்செய்துவிடுவதால், இந்திய நிறுவனங்கள் தப்பித்துக்கொள்கின்றன. ஸ்டெர்லைட் வேதாந்தாவுக்காக யாரையும் கொல்லத்துணிகிற நக்கிப்பிழைக்கும் கும்பல்கள் தூத்துக்குடியிலுண்டு. இன்னமும் நிறுவனத்தை பாதுகாப்பது அவர்கள்தான். கேட்டால் கம்யூனல் க்ளாஷ் தெரியுமா! பாக்குறியா! வடக்கே பாத்திருப்ப! இங்கே நேருக்குநேர் பாக்குறியா! பாக்குறியா! அப்டின்னு சிங்கம்படத்து வசனம்பேசுவானுக.
                 அதனால், ஃபாக்ஸ்கான் பிரச்சனையில் தொழிலாளர்களே நேரடியாக நிறுவனத்தை அணுகி, இழப்பீட்டை பெறுவதே நல்லது. அதுபோக, உணவு கான்ட்ராக்டர்களின் அட்ராசிட்டியை ஒழித்து, நிறுவனமே உணவை தயாரித்து வழங்கும்படியான தீர்மானத்தை கொண்டுவரச்செய்யுங்கள். திருப்பெரும்புதூரில் பெருநிறுவனங்களுக்கு அனுப்பிய உணவுப்பண்டங்கள் மீந்துபோய் மீண்டும் சின்னச்சின்ன ஹோட்டல்களுக்கு கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறது. இந்த உணவு சப்ளை கான்ட்ராக்டுகள் மற்றும் கேன்டீன் கான்ட்ராக்டுகளை ஒழித்து, நிறுவனங்களே கிச்சன்களை உருவாக்கி தொழிலாளர்களின் பசியை போக்கவேண்டும்.
               ஆலைத்தொழில் பாட்டாளிகளே வர்க்கமாக இணையாவிட்டால், இப்படித்தான் கண்டகண்ட பொறம்போக்குகள் சேர்ந்து பணத்திற்காக உங்களை விற்கும்நிலை உண்டாகும். இங்கே வர்க்கமாய் இணைவதற்காக கூவுகிறவர்கள், தொழிற்துறை தொழிலாளர்களை இணைத்து, ஒரு சமூகநன்மைக்கான விஷயத்தை வென்றுகாட்டுங்கள். அப்புறம் மற்றவர்களிடம் செல்லலாம்.
                                                                 புகச்சோவ்.

கருத்துகள் இல்லை: