திங்கள், 20 டிசம்பர், 2021

கேஎன்.நேரு அர்ச்சகர்களை தேரில்வைத்து- தேரைத்தொட்டு முதலில் இழுத்தது.. மரியாதை என்கிறபெயரில் நடந்த பார்ப்பன சூதுதான்.

May be an image of 1 person and text that says ''வாழை மரத்துக்குக் கட்டிவை!' "பிராமணப் பெண்கள் தட்சணை தர முடியாமல் அதற்காக இன்னொரு ஜாதிக்காரனை திருமணம் செய்து கொள்வது சரியல்ல. பெற்றோர்கள் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் வாழை மரத்திற்கு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்து விடுங்கள். பிறகு அந்த வாழை மரத்தை வெட்டி விடுங்கள். இப்போது அந்தப் பெண் விதவையாக ஆகி விட்டாள் என்று விதவைக் கோலம் கொடுத்து விடுங்கள். அற்த நோன்பை வாழ்நாள் முழுமையும் இருந்து கன்னியாகவே அவள்றம்தர்மத்தைக்காப்டாற்ற வேண்டும்!" றுசொன்னவர் காஞ்சி மூத்த சங்கராச்சாரியார். -பாரதி சிந்தனை மன்ற விழாவில் தோழர் தா. பாண்டியன் (தாய்' 8.3.1987.'

புகச்சோவ்  :  திருவாதிரை களி.....!     
  கல்லிடை தாத்தா மார்கழிக்கு வந்திடுவார். பாவை நோன்பெல்லாம் பிரபலமாகறதுக்கு முன்னாடியே ஆரம்பிச்ச வழக்கமாம். குமரி ஆச்சி காலைலயே அடிச்சி எழுப்பிவிட்ருவா!
வீட்டு முன்னயே ஆடவல்லான் ஆலயம். கையில உமிக்கரி பொட்டலத்தை கொடுத்து துவர்த்தை தோள்ல மாட்டிவிட்டு, போய் பல்தேய்ச்சி குளிச்சிட்டு தாத்தாவோடபோய் சேந்துக்கணும்.
       தாத்தா எங்களுக்கு முன்னாடியேபோய், தேவாரமும் திருவாசகமுமாய் மாத்திமாத்தி வெண்பாக்களை ஆர்.சுந்தர்ராஜன் குரல்ல பாடிட்டிருப்பார்.


செறுக்கிவுள்ள நான் வரதுக்குள்ள ஆரம்பிச்சிட்டானான்னு, திருவாழி(திருவாழிமார்பன்)தாத்தா அவசரவசரமா ஓடிவருவார்.
நாங்க குளத்துக்கு போகாமலேயே வாய்க்கால்ல காக்கா குளியல் போட்டுட்டு, துவர்தை புழிஞ்சிகிட்டே ஓடியாருவோம்.
கோயிலுக்குள்ள போகறதுக்கு முன்னாடி ஈரமான துவர்த்தை ஈர நிக்கர்மேலே கட்டிக்கிட்டுதான் போகணும். பெருநடையை ஒட்டினாப்புல கோயிலுக்கு 4:30 மணிக்கு வர்ற கிழவிககிட்டே கடலைபோடுறதுக்காகவே நின்னுட்டிருப்பாரு சுப்ரமணியம் பாட்டா. வாண்டுகள்ல யாராவது சட்டைபோட்டுக்கிட்டோ!
ஈர துவர்த்தை இடுப்பில் கட்டாமலோ! ஊத்தையாகவோ!  யாராவது வர்றதைப்பார்த்தால், வில்வ மரத்து குச்சியை ஒடிச்சிவச்சிட்டு குண்டியிலே நாலு போடுவாரு.
       லெட்சுமை ஆச்சி வர்றதுவரைக்கும் சுப்ரமணியம் பாட்டா வாசல்லயே நின்னுட்ருப்பாரு. ஆச்சி வந்ததும் பல்லகாமிச்சுக்கிட்டே பின்னாடியேபோய், ஆச்சி ஒக்கார்றதுக்கு பின்னாடிபோய் ஒக்காந்துக்குவாரு. நடராசனும், சிவஞானமும் பாட்டாவையே பாத்து கெக்கேபிக்கேன்னு சிரிச்சிட்டிருப்பானுக. நானும் அவனுக கூடப்போய் ஒக்காரலாம்னு நெனைச்சி அசஞ்சாலே திருவாழி தாத்தா பொட்டுன்னு பொடதில அடிப்பாரு. "அங்கே எந்த கிழவியப்பாக்க ஓடுக சப்புட்டியான் " அப்புடிம்பாரு.
ஆசையறாய் பாசம்விடாய்
பூசைபண்ணாய் ......
          அப்டின்னு விசாலம் அத்தை துவங்கும்போதே கருஞ்சாந்து பொட்டு அடுக்குமல்லி இலையில்வச்சி எல்லாத்துக்கும் குடுப்பாங்க. அதை வைக்கத்தெரியாம நண்டுசிண்டான்கள் நெத்திபூரா பூசிக்கிட்டு வீட்லபோய் அடிவாங்கும். பிளேடுபோட்டு சுரண்டினாலும் போகாது. எல்லா கிழட்டு பாட்டு பைத்தியங்களும் பாடிமுடிச்சப்புறமா, நான்மறை நாயகான்னு சொல்லி நாலுவித தீபாராதனைய காட்டுவாக. அப்புறமா மொதல்ல பொம்பளைகளுக்கு பிரசாதம் கொடுப்பாக. மஞ்சள் சோறு, லெமன் சோறு, பருப்புசோறு, புளியோதரை, சுண்டல், சக்கரைப்பொங்கல், பொரி, கொழுக்கட்டை, களி, பஞ்சாமிர்தம், பழம் எல்லாம் கிடைக்கும்.
             பொம்பளைங்க சேலையில் வாங்கி கட்டிக்குவாக. ஆம்பளைங்க எங்கியாவது வாழை இலையை பறிச்சிட்டு வந்திருவாக. சில பொடிசுகள் ஒரேயோட்டமா வீட்டுக்கு ஓடிப்போயி வாழியை தூக்கிட்டு வந்திரும். நான் கல்லிடை தாத்தா கூடவே நிக்கிறதால, இரண்டு கைலயும்தான் வாங்கிக்கணும். சில நச்சூத்துகள் துவர்த்தில கட்டிக்கும், இல்லேன்னா பாக்கெட்டுக்குள்ளே மொத்தத்தையும் திணிச்சிருவானுக. நான் கையில ஏந்திக்கிட்டே வாசலை தாண்டுமுன்னாடி எலே சுப்பையான்னு கூப்புடுவாரு சங்கர ஐயர். ஒரு சின்ன குத்துபோணியில் பிரசாதத்தை நிரப்பி
 ரவி கிட்டே குடுலேன்னு சொல்லுவாரு. எனக்கு ஒரு கர்வம் அப்புடியே வரும். சுத்திநிக்கிற எல்லாரையும் அப்டியே பெருமையா பார்ப்பேன். அப்புடியே அதே மரியாதையோட கர்வத்தோட வீட்டுக்கு எடுத்திட்டுப்போவேன்.
                    ஒரு இருபது வயசுக்குப்பிறகுதான் தெரிந்தது. பிராமணன் நம்மில் ஒருவருக்கு தரும் முதல்மரியாதை என்பது. அவனது அதிகாரத்தை நம்மிடம் காட்டுவதற்கானது என்று. வூட்டும், விசுவும் நடக்கும்போது, திருவிழாவை முன்நின்று நடத்தியதற்காக தாம்பாளத்தில் ஸ்பெஷல் பிரசாதம்வைத்து கொடுத்தபோதும் அதை பெருமையாகக்கருதி சந்தோஷப்பட்டுள்ளேன். ஆனால், அதில் மறைந்துகிடக்கும் பிராமண மேட்டிமையை அறியவேண்டுமெனில், பெரியாரின் கண்வேண்டும். கேஎன்.நேரு பிராமணர்களை தேரில்வைத்து இழுத்ததும்,  தேரைத்தொட்டு முதலில் இழுக்கும் மரியாதை என்கிறபெயரில் நடந்த பிராமண்யத்தின் சூதுதான். சூத்திரனை சிறிது தட்டிக்கொடுத்தால், பிராமண்யத்தின் காலடியில் கிடப்பான் என்பது அவாள்களின் தந்திரமே....!
உங்களுக்கு கிடைக்கும் முதல்மரியாதை என்பது அடிமைகள் விடுபட்டுவிடக்கூடாதென்கிற பிராமண பண்ணையம்தான்.
                                                                   புகச்சோவ்.

கருத்துகள் இல்லை: