Mathivanan Maran - Oneindia Tamil : கொல்கத்தா: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பினய் தமங் அறிவித்துள்ளார்.
க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பினய் தமாங், முன்னாள் எம்.எல்.ஏ. ரோஹித் சர்மா ஆகியோர் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மோலாய் கடாக், பிரத்யா பாசு ஆகியோர் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர்.
மோலாய் கடாக் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரும் டார்ஜிலிங் அரசியலில் புதிய பயணம் எங்களுக்கு... இந்த தலைவர்கள் வருகையால் திரிணாமுல் காங்கிரஸ் வலிமை பெறும் என்றார். பிரத்யா பாசு கூறுகையில், பாஜக மக்களை மத ரீதியாக பிரித்து கொண்டிருக்கிறது. ஆனால் பாஜகவின் அரசியலை திரிணாமுல் காங்கிரஸ் தோற்கடித்தது. டார்ஜிலிங் மேம்பாட்டுக்காக மமதா பானர்ஜியை அந்த மக்கள் நம்புகின்றனர் என்றார்.
2024 லோக்சபா தேர்தலை முன்வைத்து மமதா பானர்ஜி எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார். டெல்லி, மும்பையில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களையும் மமதா பானர்ஜி நடத்தினார். காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின் கூட்டணி என்பது மமதாவின் இலக்கு. அதனால்தான் மாநில கட்சிகள் மட்டுமே ஒருங்கிணைந்து செயல்பட்டால் பாஜகவை எளிதாக வீழ்த்த முடியும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அப்படி ஒரு மாநில கட்சிகளின் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அல்லது மமதா பானர்ஜி ஆகியோரில் ஒருவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் எனவும் கருதப்படுகிறது. பொதுவாக எதிர்க்கட்சிகளின் அணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் முன்னிறுத்தப்படுவர். ஆனால் இதனை மமதா பானர்ஜி நிராகரித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் மமதா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் கோஷம் கொல்கத்தாவில் இருந்து தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக