Esther Nathaniel : மெனிக்கே மஹே இத்தே பாடல் பாடிய சிங்கள இராணுவ அதிகாரியின் மகளுக்கு அரசாங்கம் கொழும்பு பத்தரமுல்லைப்பகுதியில் காணியொன்றை வழங்கியுள்ளது.
அந்தப் பெண் பாடல் பாடி மட்டுமே பிரபல்யம் அடைந்தார்.நல்லது
ஆயினும் இந்த இலங்கையில் இரு நூறு ஆண்டுகள் உழைக்கும் தொழிலாள வர்க்கத்துக்கு நிரந்தரமாக கூலி இல்லை .
ஒரு கல் வீடுமில்லை நிலமும் இல்லை.
ஆயிரம் ரூபாவுக்காக அரசாங்கத்தின் காதில் ஊதாத சங்கு இல்லை.சிங்களப்பிள்ளை பாட்டு பாடியதும் பிரபல்யம் ஆனதும் அரசாங்கம் காணியை கொடுக்கிறார்கள் .
இம்மண்ணிலே உழைத்து உருகுலைந்து செத்த மலையக மக்களுக்காக துண்டு நிலம் அதிலொரு கல் வீடு அரசு தரவில்லையே தோழர்களே
அப்படியானால் மலையக மக்கள் பாடி பாடி பிரபல்யம் அடைந்தால் தருவிர்களோ இங்கே லயங்கள் தீப்பிடித்து சாம்பலாகி மக்களும் சாம்பலாகும் வரை வீடு நிலம் குறித்து எவருமே வாய் திறப்பதில்லை.
அக்கரப்பத்தனை டயகம தோட்டங்களில் எரிந்த லயத்தில் இருந்துஇடம்பெயர்ந்தவர்கள் இன்னும் முகாம்களிலே தங்கியுள்ளார்கள்.
ஆனால் ஒரு பிரயோசனமே இல்லாத பாட்டை பாடியதும் காணி வழங்குவது பெரும் சிரிப்பும் சீற்றமுமாக உள்ளது
வடகிழக்கில் இராணுவம் கைப்பற்றி வைத்திருக்கும் பொது மக்களின் நிலங்க ள் ஆயிரம் பேராயிரம் வீடு இல்லாது இன்னும் குடிசைக்குள்வாழும் மக்கள் எத்தனை எத்தனை
மலையக மக்கள் இம்மண்ணின் பொருளாதாரத்துக்காக மாடாய் உழைத்து மண்வெட்டியாய் தேய்கிறார்கள் அவர்களின் காலுக்கு கீழே நிற்கும் நிலம் அவர்களுக்குச் சொந்தமில்லை.
சொந்தமில்லாத நிலத்தில் ஆண்டான் அடிமைகளென வாழ்ந்து சாகும் மலையக மக்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள் வாக்கு வங்கிகளை காப்பாற்றவே துடிப்பது போல் நடிப்பார்கள்.
காணி கொடுப்பது சந்தோசம் ஆனாலும் காலம் காலமாக உழைத்து உருகுலைந்தவன்
பத்துக்கு எட்டடி லயத்திலே பிறந்து லயத்திலே வளர்ந்து
லயத்திலே கல்யாணம் கட்டி லயத்தின் இருட்டறைக்குள் உடலுறவை அரைகுறையாய் செய்து
லயத்திலே பிள்ளைப்பெற்று
லயத்திலே
இறந்துபோகும் ஒரு துயர் கொண்ட வாழ்வு மலையக மக்களுக்கு உண்டு ஜனாதிபதி அவர்களே
அவர்களின் காணியையும் அவர்களின் கண்ணீரையும் கொஞ்சம் நினைக்கவேண்டும்
அல்லது அவர்களும் மெனிக்கே பாட்டுப்பாடினால்தான் காணி கிடைக்குமென்றால்
எந்த மெனிக்கேயை அவர்கள் நினைப்பது மெனிக்கேயை நினைத்துப் பாட்டு பாடுமளவுக்கு அல்ல அதைவிட கோரமான துயர் இசைத்து பாடிய பாடல்களும் உண்டு
அது நீங்களும் அறியல
உலகமும் அறியல
ஆடும் திருகை அரை சுத்து சுத்துமுன்னே
ஓடுங் கவலை
ஒரு கோடி
பெரிய மனுசர்களே உழைக்கும் நிலத்தை மக்களுக்கே சொந்தமாக்கு
கல் வீடு கட்டி மலையக மக்களுக்கு எப்போ கொடுக்கப்போகிறீர்கள்??
எஸ்தர்
மலையகம்
இலங்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக