புதன், 22 டிசம்பர், 2021

தூக்கியெறியப்பட்ட பாகங்களை கொண்டு ஜீப்பை உருவாக்கிய நபர் - புதிய கார் பரிசளித்த ஆனந்த் மகிந்திரா

 மாலைமலர் தத்தாத்ராய லோஹர் உருவாக்கிய ஜீப் மகிந்திரா ஆராய்ச்சி மையத்தில் காட்சிக்கு வைக்கப்படும் எனவும் ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில தேவராஷ்த்ரி என்ற கிராமத்தை சேர்ந்த தத்தாத்ராய லோஹர் என்பவர் பட்டறை வைத்துள்ளார். அவர் தனது மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக வாகனங்களின் தூக்கியெறியப்பட்ட பாகங்களை கொண்டு ஜீப் ஒன்றை வடிவமைத்துள்ளார். ரூ.60,000 மதிப்பில் உருவாக்கப்பட்ட அந்த ஜீப் எப்படி இயங்குகிறது என்பதை வீடியோ எடுத்து யூடியூபிலும் வெளியிட்டார்.
அந்த வீடியோவை பார்த்த மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, அவரை பாராட்டி புதிய பொலிரோ கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இதுகுறித்து ஆனந்த் மகிந்திரா கூறியதாவது:-

முறையான கல்வி கற்காத ஒருவரால் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த வாகனம் படைப்பாற்றலை காட்டுகிறது. கிக் ஸ்டார்ட் செய்யும் வகை தொழில்நுட்பம் இரு சக்கர வாகனங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஜீப்பில் கிக் ஸ்டார்ட் தொழில்நுட்பத்தை அவர் பயன்படுத்தியுள்ளார். இது பாராட்டக்கூடிய ஒன்று. அவருடைய வாகனத்தை இந்திய அரசு காட்டும் வழிமுறைகளுக்கு இணங்க சாலையில் இயக்க முடியாது. ஆனாலும் அவருடைய உண்மையான அக்கறைக்கு வெகுமதி அளிக்கும் வகையில் பொலிரோ கார் ஒன்றை தனிப்பட்ட முறையில் நான் பரிசளித்துள்ளேன்.

அவருடைய படைப்பு மகிந்திரா ஆராய்ச்சி மையத்தில் காட்சிக்கு வைக்கப்படும். குறைந்த பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அவரது படைப்பு அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு.   
இவ்வாறு ஆனந்த் மகிந்திரா பாராட்டியுள்ளார்

கருத்துகள் இல்லை: