புதன், 25 அக்டோபர், 2017

விஜய் டிவி நீயா நானா ... ஆண்டனி வகையறாக்கள் தங்கள் ஆம்பளத்தனத்தை ....



Divya Bharathi : இந்த வறட்டு பெண்ணியவாதிகள் பேசுவதை எந்த குடும்ப பெண்களும் ஏற்க மாட்டார்கள்... என்று சொன்ன நீயா நானா (ஆண்)டனி'க்கும் சபரிமலைக்கு நல்ல குடும்பத்து பெண்கள் வர மாட்டாங்கன்னு சொன்ன அந்த சாமியார் பயலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லைல்ல.
நீயா நானா ஆண்டனி தற்போது News 18 டீவி விவாத நிகழ்ச்சியில் Suseela Anand Geetha Narayanan போன்ற நம் தோழர்களை பார்த்து பழமைவாதி என்கிறார், அழகை பற்றி பேச உங்களுக்கு பயம் என்கிறார்..... உங்களிடம் அறிவுரை கேட்க வரவில்லை, சண்டை தான் இனி"....என்று தாறுமாறாக தன் வன்மத்தை கக்கிக் கொண்டிருக்கிறார்.
News 18ன் நீயா நானா சர்ச்சை தொடர்பான விவாத நிகழ்வில் இளங்கோ கல்லாணை என்பவர் ஏதேதோ பேசினார். ஒரு கட்டத்தில் அதில் பங்கேற்ற பெண் தோழர்களை பார்த்து "ஆறு சேனல்கள் சன்னி லியோன் பற்றி பேசிய போது நீங்களெல்லாம் எங்கே போனீர்கள்" என்று பொங்கினார். அப்படிபட்ட விவாத நிகழ்ச்சிகள் நடந்தது அந்த கருத்தாளர் சொல்லி தான் எங்களுக்கு தெரிந்தது. பல்வேறு வேலை சுமை, கள போராட்டங்கள் காரணமாக அவர் அளவிற்கு சன்னி லியோனை நாங்கள் Follow செய்யவில்லை என்பது
அப்போது தான் எங்களுக்கு உரைத்தது😒. இது போன்ற நபர்களை நம்பி தான் ஆண்டனி வகையறாக்கள் தங்கள் ஆம்பளத்தனத்தை தயக்கமின்றி வெளிப்படுத்துகிறார்கள் என்பதும் தெளிவானது.

 Aranga Gunasekaran அழகை உள்ளத்தின் உண்மையில் பார்க்கத் தெரியாது முண்டங்கள் விஜய் தொலைக்காட்சி குழுவினர்.மயிருக்குள் என்னங்கடா அழகு கொட்டிக் கிடக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் எவ்வளவு கமிசன் கொடுத்தன விஜய் தொலைக்காட்சி க்கு?இன்று அழகில் சிறந்தவர்கள் கேரளத்துப் பெண்களால் தமிழகத்துக்கு பெண்களா என்பீர்கள்? நாளை தமிழகப் பெண்களில் மிகவும் அழகானவர்கள் கறுப்பா சிவப்பு நிறமா என்பீர்கள். இப்படியே விட்டால் உழைக்கும் பெண்கள் கிராமப்புற ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்கள் வரை பேதங்களை உருவாக்கி ஆணாதிக்க மனோபாவத்துக்கு தீனி போடூவீர்கள். ஆயிரம் கிழிந்த செருப்புகளை மாலையைக் தொடுத்து விஜய் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அனுப்புங்கள் தோழர்களே

கருத்துகள் இல்லை: