Chinniah Kasi : திருப்பூர், அக். 23- திருப்பூர் பனியன் தொழிலை பாதுகாக்க
மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், அக்டோபர்23, 24 ஆகிய தேதிகளில் மாநில
செயற்குழுஉறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே. தங்கவேல்
தலைமையில் திருப்பூரில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் கட்சியின் அரசியல்
தலைமைக்குழுஉறுப்பினர் பிரகாஷ் காரத்,
மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.
வரதராசன், உ. வாசுகி,அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே. பால கிருஷ்ணன்
மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:தமிழகத்தில்
லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலாக விளங்கிகொண்டிருக்கும்
திருப்பூர் பனியன் தொழில் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. என அடுத்தடுத்த தாக்குதல்களால் பனியன் தொழி லும், சார்புத் தொழில்களும், தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளும் குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தின் பொருளாதாரமும் சிதைக்பப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுநாள் வரை ஏற்றுமதியாளர்கள் பெற்று வந்த ஏற்றுமதி உக்கத்தொகை (Duty draw back) வெட்டிச் சுருக்கப்பட்டது இத்தொழில் மீதான துல்லியத் தாக்குதலாகும்.

7.25 - 7.75 சதவிகிதமாக இருந்த (Duty draw back) 2.25 - 2.75 சதவிகிதமாக குறைக்
கப்பட்டுள்ளது. பிறநாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடமிருந்து உலகச் சந்தையில் மிகக் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் நிலையில் இந்திய அரசின் (Duty draw back) வெட்டு மிகப் பெரும் பாதிப்பை உருவாக்கும்.
எனவே இத்தொழிலைப் பாதுகாக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் கீழ்க்கண்ட
உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
(Duty draw back) பழைய நிலையிலேயே தொடர வேண்டும்.
வங்கிக் கடன் வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும்.
மின் கட்டணங்களில் சலுகை அளிக்க வேண்டும்.
இவற்றோடு உற்பத்தியாளர்கள், சார்புத் தொழிலில் உள்ளோர், ஏற்றுமதியாளர்கள் வணிகர்களோடு மத்திய - மாநில அரசுகள் விவாதித்து இத்தொழிலை நிரந்தரமாக பாது
காக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக