


இதற்கு உரியவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவி ல்லை. எனவே கோவில்களில் மிருகவதை இடம்பெறுவதற்கு தடையீட்டு எழுத்தாணை கோரி அகில இலங்கை சைவ மகாசபை சட்டத்தரணி மணிவண்ணன் ஊடாக யாழ் மேல் நீதிமன்றில் பொதுநல வழக்காக கட ந்த 2015 ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்ய ப்பட்டது.
மன்று அதை பரிசீலித்த பின்னர் கடந்த 2016.04.01 தொடக்கம், 2016.04.20
வரை இடைக்கால தடை யாழ் மேல் நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்டது.
பின்னர் கால ஓட்டத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந் தது. இந்த நிலையில் கவுணாவத்தை நரசி ம்மர் ஆலய நிர்வாகத்தினர் குறித்த வழக்கில் இடைபுகு மனுதாரராக விண்ணப்பம் செய்த ததையடுத்து இணைக்கப்பட்டனர்.
பின்னர் கால ஓட்டத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந் தது. இந்த நிலையில் கவுணாவத்தை நரசி ம்மர் ஆலய நிர்வாகத்தினர் குறித்த வழக்கில் இடைபுகு மனுதாரராக விண்ணப்பம் செய்த ததையடுத்து இணைக்கப்பட்டனர்.
அவர்கள் 300 ஆண்டுகள் பாரம்பரிய மான சமயநிகழ்வு என்றும் மத அனுஷ்டான
த்தின் படி வேள்வி பூசை நடைபெறுகிறது. அதை நிறுத்துவது சட்டப்படி தவறு. இது
மத உரிமை. எனவே வேள்வி நடத்த அனுமதி தந்து இவ் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்
டும் என மன்றில் எழுத்துமூல சமர்ப்பணம் செய்தனர்.
நீதிபதி இவ் வழக்கை ஆய்வு செய்ததன் அடிப்படையில், நேற்றைய தினம் தீர்ப்பை அறிவித்திருந்தார்
மிருக பலி நடவடிக்கை தொடர்பாக தடையாணை கோரப்பட்டது. மிருக பலி
அனுமதிக்கப்படவேண்டும் என்பதற்காக இறைச்சிக்கடை சட்டத்தை முன்வைத்து
சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு துர் ப்பாக்கிய நிலை. இறைச்சிக்கடை
சட்டத்துக் கும் இந்து சமய நிகழ்வுக்கும் என்ன சம்பந் தம் உள்ளது.
சைவ கோவில்களில் இறைச்சிக்கடை நடத்த யாரும் அனுமதி கோர முடியாது. மக்
கள் முன் வேள்வி நடத்த பிரதேச சபை அனுமதி வழங்க முடியாது. நீதிமன்ற
தீர்ப்பை பிழையாக விளங்கி பிரதேச சபை செயலாள ர்கள் சிலர் தான் தோன்றி தனமாக
அனுமதி கடிதம் வழங்கியுள்ளனர். தமக்கு அதிகாரம் உள்ளது என அதிகார
துஷ்பிரயோகம் செய் துள்ளனர். மேலும் மிருக பலியிடுதலுக்கு அனுமதி வழங்க
எந்த நீதவானுக்கும் அனு மதி வழங்கப்படவில்லை. அனுமதி கொடுத் தவர்கள் மிருக
பலிக்கு உதவியாக இருந்தா ர்கள் என்ற பெயரில் கைது செய்யப்பட வேண்டியவர்கள்.
பொது சமய விழாக்களில் பொதுமக்கள் முன்னிலையில் வேள்வி நடத்தி மிருக
பலி இடுவதற்கு அனுமதி கோரலாமா? கோவில் கள் அனுமதி கோர முடியாது.சமய
நம்பிக்கை என கோரி அனுமதி கோருவது சட்டத்துக்கு முரணானது. மன்னர் ஆட்சி
காலத்தில் இவ்வாறான சமய நம்பிக்கை இருந்தது உண்மை. அப்போது தனி ஒருவரே
முடிவுகளை எடுத்தார். ஆனால் தற்போது ஜனநாயக ஆட்சி சட்டம் என்ன சொல்கிறதோ
அதை தான் செய்ய வேண்டும்.
சில இடங்களில் வேள்வி இடம்பெற்ற பின்னர் இறைச்சி விற்பனை செய்யப்படுகி
றது. விற்பதற்கு அனுமதி இல்லை. வியாபாரம் செய்யும் இடமாக கோவில்கள்
கருதப்பட முடியாது. இதை மாபெரும் இறைச்சிக்கடை யாக தான் மன்று கருதுகிறது.
கோவில்களில் இருக்கும் பூசாரிக்கோ ஐயருக்கோ மிருக த்தை கொல்பவர்கள் என்ற
பெயர் வரக்கூடாது.
எனவே யாழ் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில்
உள்ள இந்து ஆலயங்களில் வேள்வி பூசையின் போதும், கோவில்களில்
மேற்கொள்ளப்படும் ஏனைய சமய நிகழ்வுகளிலும் மிருக பலி இடுவதற்கு முற்றான
தடையாணை மன் றினால் பிறப்பிக்கப்படுகிறது. உள்@ராட்சி சபை, பிரதேச சபைகள்,
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினருக்கு குறித்த வேள்வி நடத்துவதற்கு
அனுமதி வழங்குவ தற்கு தடை பிறப்பிக்கப்படுகிறது.
மேலும் இத் தடை உத்தரவினை மீறி எவராவது மிருக பலியிடலை மேற்கொண்
டால், அது தொடர்பாக ஒரு பொதுமகன் வழ க்கு தாக்கல் செய்தாலோ பொலிஸ்
நிலையத் தில் முறைப்பாடு செய்தாலும் அது தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து
குற்றச் செயலை புரிந்தவர்களை கைதுசெய்து அரு கிலுள்ள நீதிவான் நீதிமன்றில்
முற்படுத்த வேண்டும் என வடமாகாண பிரதி பொலி ஸ்மா அதிபருக்கு கட்டளை
வழங்கியிருந் தார். மேலும் வேள்வி பூசையின் போது மிருக பலியிடுதலுக்கு
தடையாணை பிறப்பிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பிடப்பட்ட
முதல் வழக்கு இதுவாகும் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். நேர்மை .காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக