
இவ்வழக்கில் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சேகர் ரெட்டியிடம் பிடிபட்ட ரூ2,000 நோட்டுகள் எந்த வங்கி அல்லது குடோனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது என்கிற விவரங்களை ரிசர்வ் வங்கியிடம் சிபிஐ கேட்டிருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கியோ, புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு அப்படியே வங்கிகளுக்கும் கிட்டங்கிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
ஒரு மாதம் கழித்தே நிலைமை இயல்பு நிலைக்கு வந்த பின்னர், ரூபாய் நோட்டுகளின் சீரியல் எண்கள் குறித்து வைக்கப்பட்டு எந்தெந்த வங்கிகளுக்கு அனுப்பி வைத்தோம் என்கிற பணி தொடங்கியது.
சிபிஐ குறிப்பிட்டுள்ள ரூ2,000 நோட்டுகளின் சீரியல் எண்கள் தொடர்பான விவரங்கள் எங்களிடம் எதுவுமே இல்லை என கைவிரித்துவிட்டது.
இதனால் சேகர் ரெட்டி மீதான வழக்கில் இனி மேல் நடவடிக்கை எதுவும் செய்ய முடியாத நிலைக்கு சிபிஐ தள்ளப்பட்டுள்ளது. அனேகமாக சேகர் ரெட்டி மீதான வழக்கு கைவிடப்படும் நிலைமையும் உருவாகலாம் எனவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக