சனி, 28 அக்டோபர், 2017

எச்1-பி விசாவுக்குப் புதிய கட்டுப்பாடுகள்! H1B visa: Trump admin makes it more difficult for H-1B visa extension ...

minnambalam :அமெரிக்காவில் எச்1-பி விசா பெறுவதற்கான விதிமுறைகளைத் தொடர்ந்து அமெரிக்க அரசு கடுமையாக்கி வருகிறது. இதுபற்றி சர்ச்சைகள் சில காலமாக இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் எச்1-பி விசா குறித்த சர்ச்சைகள் தொடங்கியுள்ளன.
ஏற்கெனவே எச்1-பி விசா பெற்ற வெளிநாட்டுப் பணியாளர்கள், தங்களின் விசா காலத்தை நீட்டித்துக் கொள்வதற்கான விதிமுறைகளை அமெரிக்க அரசு கடுமையாக்கியுள்ளது. இதற்கு முன்பு, ஏற்கெனவே எச்1-பி விசா பெற்ற வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களின் விசாவைப் புதுப்பித்துக் கொள்வது மிக எளிமையாக இருந்தது. ஆனால், தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின்படி, விசாவைப் புதுப்பித்துக் கொள்ள விரும்பும் ஊழியர்கள் முதற்கட்ட நிலையைப் போலவே ஒவ்வொரு முறையும் தங்களின் தகுதியை நிரூபிக்க வேண்டும்.

இதற்கான கொள்கைகளையும், விதிமுறைகளையும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு திருத்தியமைத்துள்ளது. இவ்விதிமுறைகளை அனைத்து நிலைகளிலும் கடைப்பிடிக்கவும், ஆய்வுகளின்போது கவனத்தில் கொள்ளவும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிவதன் தாக்கமாகவே இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகப் பேசப்படுகிறது.

கருத்துகள் இல்லை: