செவ்வாய், 24 அக்டோபர், 2017

திருமாவளவன் பினராயி சந்திப்பு .. தமிழகத்தின் அன்பை கொண்டுவந்தேன் .. திருமா!


திருவனந்தபுரம், அக். 23-
கேரளத்தில் தலித்துகளை அர்ச்சகர்களாகநியமித்து உத்தரவு பிறப்பித்த இடதுஜனநாயக முன்னணி அரசின் நடவடிக்கைகள், நாட்டிற்கேமுன்னோடியாக அமைந்துள்ள ஒரு புரட்சிகர மான நடவடிக்கை என கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்.திருவனந்தபுரத்தில் திங்களன்று முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில்சந்தித்து பேசிய திருமாவளவன், தலித்துகளைஅர்ச்சகர்களாக நியமித்த நடவடிக்கையை பாராட்டி தமது கட்சியின் சார்பில் கடிதம் ஒன்றையும் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:தலித்துகளை அர்ச்சகர்களாக நியமிக்கும்புரட்சிகரமான முடிவை எடுத்த உங்களதுதலைமையிலான கேரள அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.இந்திய சமூக நீதி வரலாற்றில் இது மிக முக்கியமான ஒரு நகர்வு.

‘மதசகிப்பின்மையின்’ கீழ் நாடு திணறிக்கொண்டி ருக்கும் வேளையில் கேரள அரசின் இந்த நடவடிக்கை அரசியல் சாசனத்தின் மீதான நமது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.ஸ்ரீ நாராயண குரு, அய்யங்காளி போன்றவர்களின் நாடான கேரளா, தமிழ்நாட்டின் முற்போக்கு சக்திகளுக்கு எப்போதும் தார்மீக பலத்தை வழங்கிவந்திருக்கிறது. ஆலய நுழைவிற்கு வழிவகுத்த வைக்கம் போராட்டம் ஒரு முக்கியமான முன்னுதாரணம். வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்திய தந்தை பெரியார் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.1917இல் தமிழ்நாட்டில் தி.மு.க அரசு, அர்ச்சகர்கள் பரம்பரை நியமனத்தை தடை செய்யும் வகையில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. ஆனால் அதை எதிர்த்து நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டது. பிறகு 2006இல் மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு, உரிய தகுதியும் பயிற்சியும்கொண்ட இந்து மதத்தை சார்ந்த யாரும் அர்ச்சகராக லாம் என்கிற மசோதாவை கொண்டுவந்தது.
ஆனால், இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் தமிழ்நாட்டில் இன்னும் ஒரு தலித்கூட அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை. அதனால் உங்களது இந்த நடவடிக்கை நாட்டிற்கே ஒரு முன்னோடியாக அமைந்திருக்கிறது.இந்த நேரத்தில், சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நடத்திய மாநில சுயநிர்ணயமாநாட்டில் கலந்து கொண்டு எழுச்சியுரை ஆற்றியதற்கும் நன்றிகூற விரும்புகிறோம். மாநில சுயநிர்ணய கொள்கையை மேலும் வலுப்பெறச்செய்து அதை ஒரு தேசிய அளவி லான பிரச்சனையாக தாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.கேரள அரசு மீது தமிழக மக்களுக்கு உள்ளஅன்பை வெளிப்படுத்தவும் இந்த தருணத்தைபயன்படுத்திக்கொள்கிறோம். கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள வரலாற்றுப்பூர்வமான உறவை மேலும் வலுப்படுத்த முல்லை பெரியாறு பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணும்படியும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள் ளது.
திருவனந்தபுரத்தில் திங்களன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார்

கருத்துகள் இல்லை: