dinamani : காங்கிரஸ் தலைவர் சோனியா சமீப காலங்களாக உடல்நலக் குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார்.
இதன்காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த அரசியல் விவகாரங்கள் தொடர்பான பொதுக்கூட்டங்கள், தற்போது நடைபெறவுள்ள குஜராத், ஹிமாச்சலப் பிரதேச தேர்தல்களின் பிரசாரங்களிலும் இதுவரை பங்கேற்கவில்லை.
கடைசியாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், சோனியாவுக்கு வெள்ளிக்கிழமை மாலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயிற்றுக்கோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக