தமிழில்
ஹிப்-ஹாப் ஸ்டைல் பாடல் பாடியதன் மூலமாக பிரபலமானவர் ஆதி. ‘கிளப்புல
மப்புல’,‘வாடி புள்ள வாடி’ போன்ற ஆல்பங்கள் வெளியிட்டிருந்தாலும்,
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ‘டக்கரு டக்கரு’ பாடலைப் பாடியதால் தமிழ் மக்கள்
மத்தியில் புகழ் பெற்றார்.
தற்போது தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தரச் சட்டம் வேண்டி போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆதியின் ‘டக்கரு டக்கரு’ பாடல்
வருவதற்கு முன்பும் இங்கே ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் நடந்து வருகிறது. மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் இருந்தது மற்றும் விவசாயிகள் தற்கொலை என பெரிதளவில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஒன்றுகூடி இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். ‘டக்கரு டக்கரு’ என்ற ஒற்றை பாடலை பாடிவிட்டு இந்தப் போராட்டத்துக்கு நான் தான் விதை விதைத்தேன் என ஆதி தற்போது பேட்டியளித்திருக்கிறார். இது வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டமல்ல. இது தமிழ் மக்களின் போராட்டம். ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இங்கே ஒன்றிணையக் காரணம் அவர்களின் உரிமையை மீட்கவே.
இது தனி மனிதனின் போராட்டமல்ல இதற்கு யாரும் தலைமையும் அல்ல. மக்களின் கோரிக்கை நிறைவேறும் சமயத்தில் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்புவது எனக்கு பிடிக்கவில்லை. நான் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி தான் இந்த போராட்டத்தில் பங்குபெற்றேன். எனக்கு அரசியல் பற்றி தெரியாது, இங்கே நடப்பதை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது. எனவே இந்தப் போராட்டத்தில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தங்களின் உரிமைக்காக போராடும் விஷயத்தில் தன்னை தலைவன் போல் கற்பனை செய்து கொண்டது ஆதியின் அறியாமையை காட்டுகிறது. ஆதி கஷ்டப்பட்டு கொடுத்த பேட்டியை கண்டுகொள்ளும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை. போராட்டம் ஆரம்பித்த நேரத்தில் இருந்தே அரசியல் தலைவர்களுக்கு எதிரான கோஷம் ஒலித்துக்கொண்டு தான் இருந்தது. தமிழர்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதை ஆதியின் பேச்சு திசை திருப்புவதாக உள்ளது எனப் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் மெரினாவில் நிரந்தரச் சட்டம் கொண்டு வர வேண்டி மக்களின் போராட்டம் இன்னும் எழுச்சியாய் தொடர்ந்துநடைபெற்று வருகிறது. minnambalam

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக