சனி, 28 ஜனவரி, 2017

காவல்துறை :மெரினாவில் போராட்டம் நடத்த தடை... எல்லாம் பயமயம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான பகுதிகளில் போராட்டம் நடத்த தமிழக காவல் துறை தடை விதித்துள்ளது. காவல் துறை அறிவிப்பு ஏற்கனவே முக்கிய இடங்களில் போராட்டம் நடத்த தடை உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. பொழுது போக்கிற்காக மெரினாவிற்கு பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கும் குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி பெற வேண்டும். மெரினாவில் சட்ட விரோதமாக கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.dinamalar

கருத்துகள் இல்லை: