செவ்வாய், 24 ஜனவரி, 2017

போலீஸ் வன்முறை ...விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் ஆணை !

சென்னையில் நேற்று காவல்துறையினர் நடத்திய தடியடி பெரும் வன்முறையாக வெடித்தது. இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. National Human rights commission notice to Tamilnadu government on the violence in Chennai சென்னை ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டது. ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. காவலர்கள் உட்பட ஏரளாமானோர் காயமடைந்தனர். இந்நிலையில் இந்த வன்முறை தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் சென்னையில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக தமிழக தலைமைச்செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே சென்னை மெரினாவில் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் 3 பேர் இன்று ஆய்வு செய்தனர். அவர்கள் தடியடிக் குறித்தும் ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டது குறித்தும் பொதுமக்கள் தாக்கப்பட்டது தொடர்பாகவும் விசாரிக்க உள்ளனர். tamiloneindia   காவலர் பகல் பூரா வெயில்ல காஞ்சு கஷ்டப்பட்டு பிச்சை எடுத்த காசை எண்ணும் கண்கொள்ளா காட்சி .. அதுவும் காவலர் தொப்பியில் வைத்து .. உலகம் பார்க்கட்டும்

கருத்துகள் இல்லை: