புதன், 25 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு சமுகவலை ... சொந்த செலவில் சூனியம் வைத்துகொண்ட JIO அம்பானி !

தமிழக பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து, மாணவர்கள் சக்தி ஒன்று சேர்ந்து தொடர்ந்து 8 நாட்கள் போராட்டம் நடத்தி வெற்றி கண்டனர். மாணவர்கள் அனைவரும் ஒன்று கூட அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது பேஸ்புக், வாட்ஸ்&ஆப், டுவிட்டர் போன்ற சோசியல் மீடியா. ரிலையன்ஸ் அம்பானி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஜியோ சிம் அறிமுப்படுத்தினார். ஆதார் கார்டு காண்பித்தால் சிம் இலவசம். ஜியோ சிம் இன்கம்மிங் அவுட் கோயிங் இலவசம். அதே போன்று இன்டர்நெட் இலவசம். மாணவர்கள் அனைவர் கையிலும் ஜியோ சிம் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இதுவே மாணவர்கள் வலைதளம் மூலம் ஒன்று சேர பெரும் துணையாக இருந்தது. ஜியோ சிம் இல்லை என்றால், பிற நெட் ஒர்க் பணம் செலவு செய்ய மாணவர்களிடம் வழி இருக்காது. ஜியோ இருந்த தைரியத்தில் கையில் பணம் இல்லாவிட்டாலும் போராட்டத்தில் குதித்தனர். போராட்ட களத்தில் மாணர்வர்களுக்கு தேவையான தண்ணீர், உணவு, மருத்துவ வசதி உட்பட தேவைகள் அனைத்தையும் சமூக ஆர்வலர்கள் அதிக அளவில் கொடுக்க துவங்கினர். அதன் காரணமாக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்த முடிந்தது. தொடர் போராட்டம் நடத்த மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது, ஜியோ சிம் என்பது யாரும் மறுக்க முடியாது லைவ்டே

கருத்துகள் இல்லை: