வியாழன், 26 ஜனவரி, 2017

தமிழக மாணவர்களை ஒடுக்குகிறது மோடி அரசு ! கைப்பாவையாக செயல்படுகிறது பன்னீர் அரசு

Nagarkovil 2Chart 5போராடும் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குவதன் மூலம்
டெல்லியின் ஆதிக்கத்தை திணித்துவிட முடியாது !
தமிழகத்தின் உரிமையை மீட்க ஒன்றிணைவோம் !
டெல்லிக்கு எதிராக எழுந்தது தமிழகம்! விடாதே…! தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டு!
மாணவர்களை  தாக்கி சதி செய்த மோடி அரசை கண்டித்தும், ஓபிஎஸ் பொம்மை அரசை கண்டித்தும் 23.1.2017 , திங்கள்கிழமை  நாகர்கோவில் நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Nagarkovil 1கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், நாட்றாபாளையம் கிராமத்தில் மக்கள் அதிகாரம், தமிழக மாணவர் எழுச்சியை ஆதரித்து தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் 22-1-2017 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாட்றாபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். உள்ளூர் பெரியவர்கள், வியாபாரிகள், நண்பர்கள் பலரும் இந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர். பலரும் நேரில் வந்து மாணவர் எழுச்சியை ஆதரித்தும் வாழ்த்தியும் பேசினர். குழந்தைகள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர். மக்கள் அதிகாரத்தின் இந்த தர்ணா போராட்டம் அங்குள்ள கிராம மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
Thenkani kottai 1மெரினாவிலும்தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடக்கும் மாணவர் போராட்டத்தின் சிறப்பை இங்கு விளக்கிப் பேசினர். கோவனுடைய பாடல்கள் ஒளிப்பரப்பட்டன. தோழர் மருதையனுடைய மெரினா உரைகள் போட்டு பிரச்சாரம் செய்யப்பட்டன. இவை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

Thenkani kottai
;ஜனவரி 25 – மொழிப்போர் தியாகிகள் தினம் !
RSYF Poster
சல்லிக்கட்டு தடை, பொங்கல் விடுமுறை ரத்து, கீழடி ஆய்வுக்கு மறுப்பு, புதிய கல்விக் கொள்கை, இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு…
  • தமிழ் உள்ளிட்ட பல்தேசிய இனங்களின் பண்பாட்டை அழித்து, ஒற்றை பார்ப்பனிய இந்து மத பண்பாட்டை திணிக்கும் மோடி அரசின் சதித்திட்டத்தை முறியடிப்போம் !
  • மொழிப்போர் தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்தி வீறு கொண்டெழுவோம் !
    தமிழகத்தை ஆரிய பார்ப்பன எதிர்ப்பு போரில் தளப்பிரதேசமாக கட்டியமைப்போம் !
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாச்சலம் – சிதம்பரம்.
தொடர்புக்கு : 8870. 81056.

கருத்துகள் இல்லை: