செவ்வாய், 24 ஜனவரி, 2017

அலசல் ... ராகவா லாரன்ஸ், ஹிப் ஹாப் ஆதி , ஆர்ஜே பாலாஜி ... போராட்டத்துக்கு தலைவர்களாக ...?

மாணவர்கள் ஒட்டுமொத்தமாக கோபமாக இருப்பது சினிமாக்காரர்களான ராகவா லாரன்ஸ், ஹிப் ஹாப் ஆதி மற்றும் ஆர்ஜே பாலாஜி ஆகியோர் மீது தான். 17 பேர் அமர்ந்திருந்த அந்த போராட்டத்தில் , லட்சக்கணக்கில் மக்களாகவே தன்னெழுச்சியாகி அறவழியில் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மக்களை போலவே, திரைத்துறையினர் அனைவரும் ஆதரவை அளித்தனர். இடையில் திடீரென உள்ளே நுழைந்த ராகவா லாரன்ஸ், ஹிப் ஹாப் ஆதி , ஆர்ஜே பாலாஜி ஆகியோர் முதலில் மாணவர்களோடு இருந்து,பின் மாணவர்கள் மத்தியில் பேசி, பின் தங்களை மாணவர்களின் தலைவர்கள் போல காட்ட ஆரம்பித்தனர். அரசும் இவர்கள் சொன்னால் மாணவர்கள் கேட்டு போராட்டத்தை கைவிடுவார்கள் என்று எண்ணினர்.
இந்த எண்ணம் தான் போராட்டத்தில் பெரும் குழப்பத்தை உண்டு பண்ணி, இவ்வளவு கலவரத்துக்கு வித்திட்டு விட்டது என்று சொல்லுகிறார்கள் மெரீனா மாணவர்கள். குறிப்பாக ராகவா லாரன்ஸ், ஆதி இருவருமே போராட்டத்துக் கு அவர்கள் மட்டும் தான் காரணம் போலவும்,செலவழித்தது போலவும், காட்டி மாணவர்கள் எழுச்சியை தங்களுடையதாக ஆக்க முடிவு செய்தனர். இதில் லாரன்ஸ் லட்ச ரூபாய் கூட செலவழிக்காமல், போராட்டத்தை முடித்து வைக்க தானே பிரஸ் மீட் வைத்து , லாரன்ஸ் ஏற்படுத்திய குழப்பம் மாணவர்கள் போராட்டத்தையே கெடுத்துவிட்டது. ” என்கிறார்கள். லைவ்டே

கருத்துகள் இல்லை: