புதன், 25 ஜனவரி, 2017

வன்முறையை கட்டவிழ்த்தவர்கள் ஜனநாயக இயக்கங்களை வன்முறை இயக்கங்கள் என்கிறார்கள்…

marina-protest
அருண் நெடுஞ்செழியன்thetimestamil :அருண் நெடுஞ்செழியன்: ஆர் எஸ் எஸ்,அமைப்பு சாரா நிறுவனங்களின் கூட்டு சதியின் ஊடாக துவங்கிய ஜல்லிக்கட்டு உரிமை மீதான போராட்டமானது, அது துவங்கப்பட்ட திசையில் இருந்து நேர் எதிர் திசையில் வளர்ச்சிபெற்று பாஜக மோடி அரசிற்கு எதிரான மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தின் வெற்றியாக மாறியுள்ளது.
சிவில் சமூகத்தின் பொது புத்தியில் தேசிய இன உணர்வெனும் புது ரத்தம் பாய்ச்சப்பட்டு இந்திய மாயைக்கு எதிரான தன்னியல்பாக எழுந்த இந்த மக்கள் திரள் போராட்டமானது உலகளவில் தனித்துவம் மிக்கது. இந்த மாபெரும் வெற்றியை பொறுத்துக் கொள்ள இயலாத ஆளும் வர்க்கம், வன்முறைகளை கட்டவிழ்த்து போராட்டத்தை மேற்கொண்ட இளைஞர்கள் மீதும் ஆதரவாக நின்றவர்கள் மீதும் சமூக விரோதி தேச விரோதி எனும் பிம்பத்தை பொது மக்களிடம் உளவியல் ரீதியாக கட்டமைக்க முனைகிறது.

கடந்த இரு நாட்களாக மேற்கொண்டு வருகிற போலீஸ் வன்முறை வெறியாட்டங்களை திசை திருப்ப ஜனநாயக இயக்கங்கள் மீது தேசத் துரோக முத்திரை குத்த முனைகிறது. அதைத்தான் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் மதுரை போலீஸ் ஆணையர் அமல்ராஜின் செய்தி கூறமுனைகிறது.
CPML போன்ற ஜனநயாக கட்சிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த முயற்சிக்கின்றன. அறவழியில் போராடிய மாணவர்கள் மீதும், அவர்களுக்கு துணையாக நின்ற மீனவக் குப்பத்து மக்கள் மீதும் வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்த அரச வன்முறையாளர்கள், ஜனநாயக இயக்கங்களை வன்முறை இயக்கங்கள் என கூறுவதை விட நகைச்சுவை இருக்க முடியுமா? இந்த அரச வன்முறையை, அரசின் இந்த பாசிச போக்கை மக்களிடம் அம்பலப்படுத்துவோம். போராடிய மாணவர்களுக்கு துணை நிற்போம்.
அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்; அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது. புத்தக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை: